அடுத்த 3 மணி நேரம்.. "மழை பிரிச்சு வாங்க போகுது.." 7 மாவட்ட மக்களுக்கு அலர்ட் தந்த வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கனமழையும் கொட்டி வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே கடும் மழை பெய்து வருகிறது.. இருப்பினும், தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு நேர்மாறான ஒரு கிளைமேட் தான் நிலவி வந்தது. இங்கே பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை.

அதேநேரம் வெயிலும் கூட அதிகமாகவே இருந்தது.. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வானிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. வெப்பத்திற்கு இணையாகப் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை: அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு எனப் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
எங்கே: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்... நாளையும் ஆகஸ்ட் 20ஆம் தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை மையம்: வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை: 18.08.2023 மற்றும் 19.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications