எச்.ராஜா, எஸ்.வி.சேகர், பத்ரி, ஆர்பிவிஎஸ் மணியன்... நீளும் ‘இந்துத்துவா’வின் மன்னிப்பு பட்டியல்!
சென்னை: அநாகரீகமாக, இழிவாக, குரூரரமாக பொது அமைதியை சீர்குலைக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் நீதிமன்றப் படிகளேறி "மன்னிப்பு கேட்கும்' "இந்துத்துவா'வாதிகளின் பட்டியலில் இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் இணைந்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றம் குறித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை.

எச்.ராஜா மீது வழக்கு: மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் பெஞ்ச் அப்போது எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எச்.ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார்.
எச்.ராஜா மன்னிப்பு: இந்த விசாரணையின் போது, நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. அத்துடன் நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் எனவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். இதனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தப்பித்தார் எச்.ராஜா
எஸ்.வி.சேகர்: இந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் இணைந்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக ஒரு பதிவை ஷேர் செய்தார். இது தொடர்பாக சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனால் மன்னிப்பு கேட்டால் போதுமா? என எதிர்கேள்வி கேட்டு நீதிமன்றம் விடுவதாக இல்லை. நீதிமன்றம், எஸ்வி சேகரை வெளு வெளுவென வெளுத்து வாங்கியது. இந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
பத்ரி சேஷாத்ரி: மணிப்பூர் விவகாரத்தில் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பஞ்சாயத்தில் சிக்கியவர் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. இந்த வழக்கில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பத்ரி சேஷாத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மன்னிப்பு கேட்டார். இதனால் பத்ரி மீதான வழக்கு முடிவுக்கு வந்தது.
ஆர்பிவிஎஸ் மணியன்: தற்போது அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இன மக்களை மிக இழிவாக ஒருமையில் பேசியதால் சர்ச்சையில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வருகிறார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன். இவரும் தற்போது, மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அரசு தரப்பு, மன்னிப்பு கேட்டாலும் ஜாமீன் கொடுக்கவே கூடாது என வாதிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications