Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி செய்த 3 தவறுகள்! பாஜகவிடம் பறி போன வாக்கு வங்கி? வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி செய்த மூன்று தவறுகளால் அந்தக் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்ததுடன், வாக்குவங்கியையும் பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு அதிமுக சந்தித்துள்ள முதல் தேர்தல் இது. இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் களம் கண்டது.

Tamil Nadu lok sabha election 2024 Edappadi Palaniswami Annamalai Modi BJP Tamilnadu

அதில் அதிமுக மட்டும் 32 தொகுதிகளில் போட்டியிட்டது. நின்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக.

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, புதிய தமிழகம் ஆகிய மூன்று கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. கூடுதலாக அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி அதிமுகவுக்கு ஆதரவளித்தது.

தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இதில் ஒரு தொகுதியில்கூட கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறவில்லை என்பதே சோகமான செய்தி.

பாஜகவுடனான கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என்று மேடை தோறும் முழங்கினார். ஆனால், அவரை நம்பி எந்தக் கட்சிகளும் கூட்டணிக்குள் வரத் தயாராக இல்லை என்பதே இறுதிக்கட்ட செய்தியாக இருந்தது.

கடைசி வரை இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? என ஒரு மியூசிக்கல் சேர் போட்டியை நடத்திவந்தது பாமக. 'நல்ல முடிவை எடுப்போம்' என்று அன்புமணியும் பேசிவந்தார்.

அதிமுக பக்கம்தான் எப்படியும் போவார் என எதிர்பார்த்த நேரத்தில் பாஜக அணிக்குச் செல்ல முடிவெடுத்தது பாமக. அது அந்தக் கட்சியின் உரிமை. அதில் யாரும் குறை சொல்ல முடியாது.

ஆனால், யாருடன் கூட்டணி என்று அன்புமணியிடம் கேட்டபோது 'பொறுமையாக இருங்கள். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது' என்று சொல்லி வந்தவர், திடீரென்று காலை எட்டு மணிக்கு அவசர அவசரமாக பாஜகவுடன் கூட்டணியை அறிவித்தார்.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "பாஜக கூட்டணியில் நாங்கள் 2014 முதல் இருந்து வருகிறோம். நாங்கள் எந்தப் பக்கமும் செல்லவில்லை. ஒரே பக்கம்தான் இருக்கிறோம்' என்றார். அவரது பதில் சரிதான்.

ஆனால், அதை ஏன் அவர் கடைசியில் சொல்லவேண்டும். நாங்கள் பாஜக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று அறிவித்திருந்தால், மீம்ஸ் போட்டு விமர்சிப்பவர்களை எல்லாம் தவிர்த்திருக்கலாம்.

அதேபோல் ஊடகங்களில் தவறான புரிதலில் என்று சொல்ல வேண்டிய நிலைமை அவருக்கு வராமல் தவிர்த்திருக்கலாம். ஆக, இறுதியாக அதிமுக கூட்டணியை ஏற்காமல் பாமக வெளியேறியது. அதற்கான இழப்புகளை இந்தத் தேர்தல் முடிவு இந்த இரண்டு கட்சிகளுக்கும் அளித்துள்ளது சொல்ல வேண்டும்.

பாமக எப்படி இறுதி நேரத்தில் அதிமுக கூட்டணி இல்லை என அறிவித்ததோ அதேபோல தருமபுரி வேட்பாளரை அறிவித்துவிட்டு, அதன் பின்னர் சௌமியா அன்புமணியை மாற்றியது.

எப்படிப் பார்த்தாலும் பாமக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தத் தேர்தலில் கூட்டணியை முடிவு செய்வதில் பல சொதப்பல்களைச் செய்துள்ளன என்றே தெரிகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் மொத்தம் 380877 வாக்குகளைப் பெற்று, 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

Tamil Nadu lok sabha election 2024 Edappadi Palaniswami Annamalai Modi BJP Tamilnadu

இதே தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 166271 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆக, பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் நிச்சயம் இந்தத் தொகுதி அதிமுக கைவசமாகி இருக்கும். அதை அதிமுக தவறவிட்டுவிட்டது.

இது ஒரு அடையாளம்தான். இப்படிப் பல தொகுதிகளில் பாஜகவை தன் பக்கம் தக்கவைத்திருந்தால் அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் கொஞ்சம் வெற்றி முகமாக மாறி இருக்கும்.

இது மட்டுமல்ல அதிமுக தருமபுரி, திருநெல்வேலி, கோவை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுகவை 3 ஆம் இடத்திற்குத் தள்ளி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது பாஜக. அது மட்டுமல்ல, இந்தத் தொகுதிகளில் எல்லாம் பாஜக குறைந்தது 2 லட்சம் வாக்குகள் மேல் வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக ஒட்டுமொத்தமாக 11.24% வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. அதாவது மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னதைப்போல இரட்டை இலக்கத்தில் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. அதிமுகவின் மொத்த வாக்கு சதவீதம் 20.26%. அதாவது பழைய நிலையிலிருந்து கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது. அது பாஜகவுக்குச் சாதகமாக மாறியுள்ளது.

பாஜக இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்திருந்தால் கிட்டத்தட்ட 32% வாக்குகளை அந்தக் கூட்டணி பெற்றிருக்கும். அது அதிமுகவின் பழைய செல்வாக்கைத் தக்க வைத்திருக்கும்.

அதைத் தவற விட்டுவிட்டு தேமுதிகவைக் கூட்டணியில் இணைத்தார் எடப்பாடி. அந்தக் கட்சி 2.59% வாக்குகளைப் பெற்றுள்ளது. பழைய நிலையிலிருந்து அக்கட்சி வளர்ந்திருந்தாலும், இதன் வருகை அதிமுகவைக் காப்பாற்றவில்லை என்பதையே இந்தத் தரவுகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவை விட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறியது சிறப்பான முடிவுதான். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது திமுகவின் மறைமுக திட்டமாகவும் இருந்தது என்பதை சில நம்பகத்தன்மையான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

பாஜகவை விட்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி பலமான வேட்பாளர்களைத் தேர்தலில் களம் இறக்காதது மிகப்பெரிய தவறு. அக்கட்சியின் அடையாளமாக இருக்கும் முகங்களை அவர் களம் இறக்கி இருக்க வேண்டும்.

Tamil Nadu lok sabha election 2024 Edappadi Palaniswami Annamalai Modi BJP Tamilnadu

அடுத்து தேர்தல் பரப்புரையில் பாஜகவை விமர்சிக்க அவர் தயங்கினார். வெளியேறிய பிறகு வாழ்வா ? சாவா ? என்று மோடி மீதான விமர்சனத்தை எடப்பாடி கையில் எடுத்திருந்தால், நிச்சயம் ஒரு மாற்றத்தை அவர் கட்சி அறுவடை செய்திருக்கும்.

பரப்புரையில் கடைசி நேரத்திலாவது ஜெயலலிதா பாணியில் 'மோடியா? லேடியா?' என எடப்பாடி வேகம் காட்டி இருந்தால், நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றிக் கொடியை நாட்டி இருக்கலாம்.

அதையும் அவர் செய்யவில்லை. ஒரு அரசியல் தலைவராக அவர் செய்யவேண்டி முதல் வேலை கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த இரண்டையும் அவர் செய்யத் தவறிவிட்டார்.

எப்படி நட்பாக இருந்து, நவீன் பட்நாயக்கை மிகக் கடுமையாக பாஜக ஒடிசாவில் விமர்சித்ததோ அதே நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், திமுகவுக்கு சில இடங்களைச் சறுக்கச் செய்திருக்கலாம்.

ஆக, எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது தவறு. அடுத்து வெளியேறிய பின் விமர்சிக்காதது தவறு. கட்சியின் முக்கிய தலைவர்களைக் களத்தில் நிறுத்தி, ஒரு நம்பகத்தன்மையை உருவாக்காதது மற்றொரு தவறு. அவர் செய்த இந்த மூன்று தவறுகள் கட்சியின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+