தேவியை பிடித்தாட்டிய பணத்தாசை.. ஜெயாவை தலைகாணியால் அழுத்தி கொன்ற கொடூரம்.. 3 பேர் கைது
மாநகராட்சி பெண் ஊழியரை கொன்ற பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: விதவை தங்கையை, தலைகாணி வைத்தே அமுக்கி கொலை செய்துவிட்டார் கூடபிறந்த அக்கா! இதையடுத்து அக்கா உட்பட 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, ஜோதி தோட்டத்தைச் சேர்ந்த தம்பதி மூர்த்தி - ஜெயா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஜெயாவுக்கு வயசு 34. இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். மாநகராட்சி ஊழியரான இவருடைய தந்தை இறந்ததால், வாரிசு அடிப்படையில் ஜெயாவுக்கு இந்த வேலை கிடைத்தது.
இதனிடையே, 2 வருஷத்துக்கு முன்னாடியே நோய் பாதிக்கப்பட்டு மூர்த்தி இறந்துவிடவே, மகனை தனியாளாக கவனித்து வளர்த்து வந்தார் ஜெயா. இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளதால், அதன் வாடகையும் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தேவி
இவருடைய அக்கா தேவி மாமல்லபுரத்தில் உள்ளார். அவர் கொஞ்சம் பணக்கஷ்டத்தில் உள்ளதால், அவரது வீட்டு வாடகை பணத்தையும் ஜெயாதான் தந்து வருகிறார். இதைதவிர அக்காவுக்கு எந்த உதவி என்றாலும் ஜெயா முன்னின்று செய்வாராம்.

விசாரணை
இந்நிலையில், சம்பவத்தன்று காலை ஜெயா மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார். ஜெயாவுக்கு ஏற்கனவே வயிற்றில் இருந்த கட்டிக்காக ஆபரேஷன் நடந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இறந்துவிட்டதாகவும் தேவி கதறி கதறி சொல்லி கொண்டே அழுதார். சைதாப்பேட்டை போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.

திடுக் தகவல்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஜெயாவின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் 2 பேர் ஜெயா வீட்டுக்கு வந்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்துதான் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக் திடுக் தகவல்கள் வெளியே வந்தன.

கூலிப்படை
இளம் விதவை ஜெயா, ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவரை 2-வதாக கல்யாணமும் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். ஆனால் இது அக்கா தேவிக்கு பிடிக்கவில்லை. கல்யாணம் பண்ணி கொண்டால், செய்து வரும் உதவிகள் நின்றுபோகும் என்று தேவி பயந்தார். அதனால் ஜெயாவின் சொத்துக்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடிவு செய்தார்.

கைது
அதற்காக ரூ.10 ஆயிரம் கூலி கொடுத்து தன்னுடைய மாமா எத்திராஜ் என்பவரையும், அவருடைய கூட்டாளி சரவணன் என்பவரையும் கொலை செய்ய அனுப்பி வைத்தார் தேவி. அவர்கள் இருவரும் ஜெயாவை தலைகாணியை வைத்து அமுக்கியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். தேவி, எத்திராஜ், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications