மீனுக்கு விரித்த வலையில் "பொருள்"? ஆர்வமுடன் கிட்ட போய் பார்த்த மீனவர்கள்! பரபரத்த சென்னை போரூர் ஏரி
சென்னை: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி கொண்டிருக்கிறது போரூர் ஏரி.. இந்த ஏரியில் அவ்வப்போது மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிப்பது வழக்கம்.. இந்த மீன்களை பிடித்து, ஏரிக்கரை பகுதியிலேயே பெரும்பாலும் விற்றுவிடுவார்கள். மீன்களை ஃபிரஷ்ஷாக வாங்குவதற்கு மீன்பிரியர்களும் ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில், இன்றைய தினமும் மீனவர்கள் போரூர் ஏரியில் மீன் பிடித்தனர்.. அப்போதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது போரூர் ஏரி. இது ரெட்டேரி என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி கொண்டிருக்கிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரம்
இந்த ஏரி 250 ஏக்கருக்கும் மேலான பரப்பளவைக் கொண்டது. இங்கு 4 வடிப்பான்களை கொண்டு 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியில் இருந்து நீர் எடுத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகமும் செய்யப்படுகிறது.
எனவே, கடந்த 1995ம் ஆண்டு முதல் இந்த ஏரியில் குளிப்பது, துணி துவைப்பது, நீச்சல் அடிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த போரூர் ஏரியில், மீனவர்கள் விசை படகுகளில் சென்று மீன் பிடிப்பது வழக்கம்.. அப்படித்தான் மீனவர்கள் சிலர், மீன் பிடிப்பற்காக வலையை விரித்துள்ளனர்..
வலையில் சிக்கிய மிகப்பெரிய பொருள்
அப்போது, வீசப்பட்ட வலையில் மிகப்பெரிய அளவிலான பொருள் ஒன்று சிக்கியிருக்கிறது.. சிக்கிய பொருள் என்னவென்று மீனவர்கள் வலையை இழுத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு உடனடியாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்..
விரைந்து வந்த போரூர் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்க முயன்றனர்.. அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன், சடலத்தில் கயிறு கட்டி, கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கொலையா, தற்கொலையா
பிறகு சடலத்தை, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அழுகிய நிலையில் கிடந்த அந்த ஆணுக்கு 40 அல்லது 45 வயதிலிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என அடையாளம் தெரியாத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். போரூர் ஏரியில் மீனுக்கு வீசப்பட்ட வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சிக்கியிருப்பது சென்னையில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications