தழும்பே இல்லாமல் தைராய்டு அறுவை சிகிச்சை! முற்றிலும் இலவசம்: அரசு மருத்துவர்கள் சாதனை
சென்னை: சென்னையில் உள்ள கிண்டி மருத்துவமனை தைராய்டு அறுவை சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை கிண்டியில் கட்டப்பட்டியிருந்த ரூ.240கோடியில் கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இது 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று அப்போது முதல்வர் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

இப்போது மற்றொரு சாதனையைச் சத்தமே போடாமல் சைலண்ட் ஆகச் செய்து முடித்துள்ளனர் இங்கே பணி செய்து வரும் மருத்துவர்கள். அப்படி என்ன செய்துவிட்டது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். முக்கியமாகப் பெண்கள் இந்தச் செய்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கடந்த மூன்று வருடங்களாக தைராய்டு நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தைராய்டு கட்டி அதிகம் பெரியதாகிவிட்டதைக் கண்டறிந்தனர். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய சில லட்சங்கள் செலவாகும் என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு வசதி இல்லாத புவனேஸ்வரி, அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என சொன்னதால், உடனடியாக அவர் கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தைராய்டு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினால், கழுத்து பகுதியில் தழும்பு உருவாவதைத் தடுக்க முடியாது. அதற்குப் பயந்தே பல பெண்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வதில்லை. ஆனால், புவனேஸ்வரிக்கு நுண் துளைக் கருவியைப் பயன்படுத்து கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி சாதித்துள்ளனர் அரசு மருத்துவர்கள். இதனால் கழுத்தில் வழக்கமாக ஏற்படும் தழும்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிப் பேசிய மருத்துவர் ஜாய்னர் ஆப்ரகாம், "நேரடியாகக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யாமல், வாய்வழியாகக் கருவியைச் செலுத்தி கட்டியை அகற்ற முடியும். இதை ட்ரான்ஸ் ஓரல் எண்டோஸ்கோபி தைராய்டு எண்டமிக் என்று குறிப்பிடுவோம். மிகப்பெரிய கட்டியாக இருந்தால் இந்த முறையில் அகற்ற முடியாது. 6செ.மீட்டருக்கு குறைவாக இருந்தால், இந்த வகை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிவிடலாம்" என்கிறார். இந்த மருத்துவக் குழுவில் டாக்டர் காளிராஜ் கூட இருந்துள்ளார்.

அவர், "பல பெண்கள் இளம்வயதில் இந்த மாதிரியான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அறுவை சிகிச்சையால் வரும் தழும்பு அவர்களின் மனதிற்கு ஒரு தடையாக உள்ளது. எனவே அந்த மாதிரி உணர்வு கொண்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம்" என்கிறார்.
இந்த அறுவை சிகிச்சை முடிந்த 2 நாட்களில் ஒரு நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியும். வலியும் கூட அதிகம் இருக்காது. காயங்களைப் பார்க்க முடியாது. சிகிச்சை முடிந்த பிறகு புவனேஸ்வரியால் உடனடியாக பேசவும் முடிந்துள்ளது. இந்த அளவுக்குச் செலவு இல்லாமல் மிகப்பெரிய சிகிச்சையை அரசு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செய்ததால் தான் உயிர்பிழைக்க முடிந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications