சீனா அதிபருக்கு எதிராக போராட்டம்: சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக சென்னையில் 2 இடங்களில் போராட்டம் நடத்திய 11 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்து தமது ஒருபகுதியாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத் தலைவராக இருந்த தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்தியாவில் திபெத் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் திபெத்தியர்கள் சீனாவிடம் இருந்து சுதந்திரம் கோரி தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
உலகின் எந்த பகுதிக்கு சீனா அதிபர் சென்றாலும் அங்கே போராட்டங்களை திபெத்தியர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகம் வரும் ஜின்பிங்குக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டங்களை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

அதனால் திபெத்தியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் ஜின்பிங் தங்கும் ஐடிசி சோழா கிராண்ட் ஹோட்டல் முன்பாக திபெத் கொடியுடன் வந்த பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
#WATCH Chennai: Police detained Tibetan activists who were protesting outside the ITC Grand Chola Hotel where Chinese President Xi Jinping will arrive later today. #TamilNadu pic.twitter.com/fgJkQyX0gs
— ANI (@ANI) October 11, 2019
விமான நிலையம் அருகே..
இதனிடையே சென்னை விமான நிலையம் அருகே ஜின்பிங்குக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் மேலும் 6 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications