பரந்தூர் ஏர்போர்ட்.. பட்டாசாக ரெடியாகும் மாஸ்டர் பிளான்.. இதுதான் டிட்கோவின் கலக்கல் திட்டம்! செம
சென்னை: சென்னையின் 2வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகளை இப்போது அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமையும் பகுதியில் உள்ள மக்களை வேறு இடத்தில் மறுகுடியேற்றம் செய்ய டிட்கோ சூப்பர் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் முக்கிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனத் தெரிகிறது.
சென்னையில் இப்போது மீனம்பாக்கத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஏர்போர்ட்டை விரிவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், அருகே உள்ள இடம் ராணுவத்திற்குச் சொந்தமானது என்பதால் விரிவுபடுத்த முடியவில்லை. இதற்கிடையே பரந்தூரில் மக்கள் போராட்டத்தைத் தொடரும் நிலையில், இந்த பிரச்சினைக்குத் தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியில் டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இறங்கியுள்ளது.
பரந்தூர் ஏர்போர்ட்: சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமையும் நிலையில், இதனால் அங்கு வாழும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களை வேறு இடத்திற்குக் குடியேற்றம் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கான மாஸ்டர் பிளானை போடவே இப்போது டிட்கோ ஆலோசகரைத் தேடி வருகிறது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடத்திற்குக் குடியேற வேண்டும். இதற்காக 245 ஏக்கர் பரப்பளவில் நான்கு இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்த இடங்களை டிட்கோ இப்போது அடையாளம் கண்டுள்ளது. இவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு: பரந்தூரில் சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தால் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாள முடியும். இதற்காகவே இப்போது பல கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்குத் தான் டிட்கோ இப்போது ஆலோசகரை நியமிக்க உள்ளது.
இந்த ஆலோசகர் முன்மொழியப்பட்ட விமான நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை (சுமார் 1000 குடும்பங்கள்) இடமாற்றம் செய்யும். மேலும், விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவை விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கும்.
மாஸ்டர் பிளான்: மீள்குடியேற்ற செயல் திட்டத்தில் இருந்து இந்த நிறுவனம் அதை மாஸ்டர் பிளானுக்கு திட்டத்திற்கு ஏற்ப மாற்றும். நில ஒதுக்கீடு மற்றும் வீட்டுக் கட்ட தேவையான பணிகள், உள்கட்டமைப்பு, சமூக வசதிகள் ஆகியவற்றை மாஸ்டர் பிளானில் கொண்டு வருவார்கள். இரண்டு அல்லது மூன்று ஆப்ஷன்களை உருவாக்கித் தருவார்கள் எனத் தெரிகிறது. சாலைகள், நீர் வழங்கல் துறை, மின்சாரம், கழிவுநீர் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இந்த மாஸ்டர்பிளானில் இருக்கும்.
தமிழ்நாடு அரசு அளிக்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த முதன்மைத் திட்டம் இருக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்த டிட்கோ திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு நிலம்: பரந்தூரில் அமையும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 5,369 ஏக்கர் (2172.73 ஹெக்டேர்) நிலம் தேவைப்படுகிறது. பரந்தூர் பகுதியில் ஏர்போர்ட் கட்டுமானத்திற்குத் தேவையான நிலத்தில் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் அமையும் இந்த கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் மொத்தம் நான்கு கட்டங்களாக கட்டப்பட உள்ளது. இதில் முதற்கட்டத்திற்கு ரூ. 13,854 கோடி செலவாகும்.. மற்ற மூன்று கட்டங்கள் சேர்த்து இதற்கு மொத்தம் ரூ.29,143 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications