மலேசியாவில் ‘சர்வீஸ்’.. 2 மணி நேரத்துக்கு 2 லட்சம்.. டிக்டாக் இலக்கியாவின் அபத்த பேச்சு.. படு வைரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக்கில் கவர்ச்சியான வீடியோ கால் மூலம் பிரபலமான இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாகவும் தன்னுடைய மரணத்திற்கு திலீப் சுப்ராயன் தான் காரணம் என கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தன் மீதான குற்றச்சாட்டுக்கு திலீப் சுப்பராயன் மறுப்பு தெரிவித்துள்ளார் இந்த நிலையில் மலேசியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட இலக்கியா இன்ஸ்டாகிராம் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுடன் பேரம் பேசிய ஆடியோக்கள் திடீரென சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

சினிமா உலகில் தற்போதைக்கு பரபரப்பான விவகாரம் என்றால் அது இலக்கியா, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விவகாரம் தான். டிக் டாக் இருந்தபோது மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ போட்டு பிரபலமானவர் இலக்கியா.

டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் கடையை விரித்து இருக்கிறார். மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் நடனம் என்ற பெயரில் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TikTok elakkiya dhilip subbarayan cinema

இது ஒரு புறம் இருக்க திடீரென பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் மீது புகார் கூறியிருப்பது சினிமா உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் திடீரென ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் இலக்கியா. அதில், "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன் கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து.. என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்" என மேலும் அந்தப் பதிவுடன் திலீப் சுப்பிராயனை புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இலக்கியா நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது பதிவுகளை நீக்கிய இலக்கியா அனைத்துமே தவறான செய்தி என மாற்றி இருந்தார்.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து இருந்தார் திலீப் சுப்பராயன் அதில்," இன்ஸ்டாகிராம் தளத்தில் எனது பெயரைக் குறிப்பிட்டு முற்றிலும் பொய்யான பதிவு ஒன்று பகிரப்பட்டது. பிறகு, அந்தப் பதிவு உடனடியாக நீக்கபட்டு, 'All are Fake News' என அந்த நபர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே விளக்கமும் அளித்துவிட்டார். இருப்பினும், என் மீது உள்ள காழ்ப்புணர்சியில், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கபட்ட உண்மைக்கு புறம்பான அந்தப் பதிவை சில ஊடகங்கள் எவ்வித உண்மையையும் ஆராயாமல் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவருகிறோம். மீண்டும், அந்தப் பதிவில் எவ்வித உண்மையும் இல்லை, அது முற்றிலும் பொய் என பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதையும் மீறி என் மீது பொய் குற்றசாட்டுகள் பரப்புபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மீது தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பிரபலங்களை மிரட்டிய அவர் பணம் பறிக்க முயல்வதாக திலீப் சுப்ராயனின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே டிக் டாக் இலக்கியா பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவிடம் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தவறான தொழிலுக்கு இலக்கியாவை அழைக்கிறார் சூர்யா.

" சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு பெண்களை நான் அழைத்துச் செல்கிறேன். மலேசியாவிலும் எனக்கு நிறைய கஸ்டமர்கள் இருக்கிறார்கள். அங்கு ஒரு சிறிய கிராமம் இருக்கிறது எந்த பிரச்சனையும் இருக்காது நான் பார்த்துக் கொள்கிறேன் மாதம் உனக்கு எவ்வளவு வேண்டும் என கேட்கிறார் சூர்யா. அதற்கு நான் இப்போதே இரண்டு மணி நேரத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வாங்குகிறேன். அங்கு இரண்டு மாதம் என்றால் நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் எனக்கு இரண்டு மாதத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் வேண்டும்" என பேசி இருக்கிறார்.

தற்போது அப்போதே இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+