10 ஆண்டு கழித்து.. 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 158 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள். அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஐந்து முனை போட்டி
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் போட்டி போடுகின்றன. மேலும் மக்கள் முன் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறியவும் இக்கட்சிகள் முயற்சிக்கின்றன.

அதிமுக கூட்டணிக்கு 65 இடங்கள்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பெறும். அதிமுக கூட்டணிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

32.1 சதவீதம்
தமிழகத்தில் 43.2 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 3.8 சதவீதம் அதிகமாகும். அது போல் அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை காட்டிலும் 11.6 சதவீதம் குறைவாகும்.

மே 2 வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ளது 16 ஆவது சட்டசபைக்கான தேர்தல் ஆகும். தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஏப்ரல் 6இல் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
