Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுக்கு அல்வா... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு... பா.ம.க.வின் தடம் மாறிய கூட்டணி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நேற்று இரவு திடீரென அதன் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் பெரும்பாலானவை வட தமிழகத்தில் உள்ளன.

இதனால் வடதமிழகத்தில் செல்வாக்கு உள்ள பா.ம.க.வின் நிலைப்பாடு என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. அதிமுக-பாஜக கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் அந்த அணிக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் அதன் கூட்டணியும் முழு பலத்தை காட்டும் என்பதுதான் யதார்த்தம்.

தனித்தே போட்டி

தனித்தே போட்டி

இந்நிலையில்தான் பா.ம.க. திடீரென, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படும் என்றும் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக தேர்தல் கள வரலாற்றில் பா.ம.க. தனித்துப் போட்டியிட தொடங்கி பின்னர் திமுக, அதிமுக அணிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்கிற வகையில்தான் பா.ம.க. செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் இப்போதைய தனித்துப் போட்டி அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.

முதலில் தனித்து போட்டி

முதலில் தனித்து போட்டி

1989-ம் ஆண்டு பா.ம.க. தொடங்கப்பட்டது. அப்போதைய லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிட்டு சுமார் 16 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மீண்டும் தனித்தே போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றது. அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீது ஊர்வலம் வந்து சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது பா.ம.க.வுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிமுக, திமுகவுடன் கூட்டணி

அதிமுக, திமுகவுடன் கூட்டணி

1996 சட்டசபை தேர்தலில் மதிமுக, சி.பி.எம், வாழப்பாடி காங்கிரஸ் என ஒரு கலவையான 3-வது அணிக்கு முயற்சித்தது. அந்த முயற்சி வெல்லவில்லை. 1998 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக அதிமுக-பாஜக அணியில் பா.ம.க. இடம்பெற்றது. ஆனால் 1999-ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டனி அமைத்தது பா.ம.க. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க. ஆனால் இந்த கூட்டணியும் நீடிக்காமல் ஜெயலலிதாவுடன் மோதினார் டாக்டர் ராமதாஸ்.

Recommended Video

    தோளில் இருக்கும் துண்டு போலதான் கூட்டணி! தேவை இல்லையெனில் கழற்றி வைத்துவிடலாம் - செல்லூர் ராஜு
    மாறி மாறி கூட்டணி

    மாறி மாறி கூட்டணி

    இதையடுத்து 2004 லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பா.ம.க. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் அமைத்த கூட்டணியில் பா.ம.க.வும் சங்கமித்தது. 2011 சட்டசபை தேர்தலின் போது மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க, 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போனது. 2016 சட்டசபை தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளர் என தனித்துப் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது பா.ம.க.

    அதிமுக-பாஜக அணி

    அதிமுக-பாஜக அணி

    2019 லோக்சபா தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக அணியில் இடம்பெற்றது பா.ம.க. இந்த தேர்தலில் 5 எம்.எல்.ஏக்களையும் பெற்றது அந்த கட்சி. இருந்த போதும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அண்மையில் பிரகடனம் செய்திருந்தார் டாக்டர் ராமதாஸ். இதனிடையே தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் அந்த கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்தது பா.ம.க. இதனால் திமுக அணிக்கு பா.ம.க. செல்லக் கூடும் என கூறப்பட்ட நிலையில் திடீரென அதிமுக- பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது அக்கட்சி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+