திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சிவகுமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி இமெயில் மூலம் ஒருவர் சிவகுமார் பேசிய காணொளியை விஜிலன்ஸ் அதிகாரிக்கு பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசியிருந்த காணொளி அதில் இடம் பெற்றிருந்தது.
அந்த காணொளியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருப்பதி கோயில் நிர்வாகத்தை விமர்சித்து சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது.

விஜிலென்ஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணியா என்பவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகர் சிவகுமாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை இரண்டாவது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவறான பிரச்சாரம்
இதேபோல, ஜூன், 30ம் தேதிவரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என தவறான பிரச்சாரம் செய்த சில மீடியாக்கள், மற்றும் திருமலை கோவில் இந்து கோயிலாக பின்னர் மாற்றப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பேஸ்புக் நிர்வாகி உள்ளிட்டோர் மீதும் போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடரும் சர்ச்சைகள்
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா மற்றும் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகள் குறித்து செய்திகள் பல்வேறு வகைகளில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒரு கருத்தை நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தெரிவிக்க, அதற்கு இந்து அமைப்புகள் எதிரிப்பு தெரிவித்திருந்தன.

சிவகுமார் விளக்கம்
முன்னதாக கடந்த ஆண்டு, சிவகுமார் வெளியிட்ட ஒரு வீடியோ விளக்கத்தில், தானும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும், முருக பக்தன் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இப்போது திருமலையில், சிவகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications