புஸ்ஸூன்னு போச்சே "முதலாளி".. நெல்லையில் "அந்த" குரல்.. அரண்ட போன பாஜக.. நயினார் நாகேந்திரன் அசரலயே
சென்னை: நயினார் நாகேந்திரனுக்கு இந்த முறை சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் நெல்லையில் பரபரப்பாக நடந்து வரும் விவாதமாகும்.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்... அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர். உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது அப்போதே அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

நெல்லை பாஜகவின் வெற்றிபெற்ற ஒரு எம்எல்ஏவாகவும் வலம் வருபவர். பாஜகவில் இரண்டாம் கட்டத் தலைவராகவும் நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார். பாஜக மாநில துணைத் தலைவராக மட்டுமல்ல, பாஜக சட்டமன்றக்குழு தலைவராகவும் பொறுப்பில் உள்ளார். இவ்வளவும் இருந்தும், எம்பி சீட் வேண்டும் என்ற ஆசையும் நயினாருக்கு துளிர்த்துள்ளதாக தெரிகிறது.
தலைமை: இதனால் மத்திய அமைச்சர் பதவியையும் பெற்றுவிடலாம் என்ற எண்ணமும் உள்ளதாக தெரிகிறது. எம்பி சீட் வழங்க கோரி, மேலிடத்தில் முன்வைக்கவும், தலைமையும் இதற்கு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், நெல்லை தொகுதியில் நயினாருக்கு சீட் தருவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நயினாருக்கு சீட் கொடுத்தால் அங்கு பாஜக படுதோல்வி அடையும் என்று பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்ற திட்டத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா என்பவர் சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர்கள்: அதில், "புறக்கணிக்காதே..! புறக்கணிக்காதே..! வெள்ளாளர்களைப் புறக்கணிக்காதே! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர் சமுதாயத்தை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்து கொள். திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும், எச்சரிக்கிறோம்." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள்தான் கடந்த 2 நாட்களாகவே மிகுந்த பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன.. எதற்காக நயினாருககு எதிர்ப்பு கிளம்பி உள்ளது? நெல்லையில் என்னதான் நடக்கிறது?
அதிருப்தி: நெல்லையின் சிட்டிங் திமுக எம்பி ஞானதிரவியம் மீது, மக்களுக்கு அதிருப்தி இருந்துவருகிறது.. இதைதான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுமே முயல்கின்றன..
இந்த தொகுதியில், பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இதில் நெல்லை, பாளையங்கோட்டை இந்த2 தொகுதிகள் நகர் பகுதியிலும், மிச்சமுள்ள 4 தொகுதிகளும் கிராமப்புறங்களிலும் வருகின்றன.
அதனால்தான், பாஜகவின் குறி இங்கு அழுத்தமாக விழுந்துள்ளது.. ஆனால், நெல்லையில் அதிமுக, திமுக கட்சிகளின் செல்வாக்கே இதுவரை அதிகமாக இருந்து வருகிறது. அதனால், செல்வாக்கு மிக்க ஒருவரை நிறுத்தினால் நெல்லையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. அதனால்தான், நெல்லையில் செல்வாக்குபெற்ற நயினாருக்கு சீட் தர முயல வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
முதலாளி: அதற்கேற்றபடி நயினாரும், தொகுதியில் பிரபலமானவர்.. முதலாளி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.. தாராளமாக தேர்தல் செலவை செய்பவர் என்பதால், இதையும் பாஜக கணக்கில் கொண்டுள்ளதாக தெரிகிறது.
தான் சீட் கேட்டால் தலைமை மறுக்காது என்று கனத்த நம்பிக்கையுடன் நயினாரும் உள்ளதாக தெரிகிறது. தற்சமயம் எம்எல்ஏவாக இருப்பதால், சீட் கொடுக்க தலைமை மறுத்தால், மகன் நயினார் பாலாஜிக்கு சீட்டை வாங்கி தந்துவிட வேண்டும் என்ற முடிவிலும் உள்ளாராம். அதனாலேயே தொகுதியில் முன்கூட்டியே பணிகளையும் ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: இப்படித்தான், கடந்த சட்டமன்ற தேர்தலில், வேட்பாளர் லிஸ்ட் அறிவிப்பதற்கு முன்பேயே, முதல்நபராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் நயினார். இப்போது தனக்கு சீட் கிடைக்கும் நம்பிக்கையில் தேர்தல் அலுவலகம் திறந்து, களப்பணியிலும் இறங்கிவிட்டார்.. ஆனால், ஆரம்பமே புஸ்ஸாகி போயிருக்கிறது.. நயினாருக்கு நெல்லையில் எதிர்ப்பு குரல் வலுத்து வருவதால், மிகப்பெரிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு நெல்லை இல்லை! நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவதற்கு இப்படி ஒரு காரணமா? பேட்டர்னை பாருங்க! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications