கவனிச்சீங்களா! சீறிய ஜோதிமணி! துணைக்கு நின்ற சிபிஎம்! திருப்பரங்குன்றத்தால் நெருக்கமான திமுக கூட்டணி
சென்னை: கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. முக்கியமாக சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் திமுகவை அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தனர்.
பல விவகாரங்களில் திமுகவை இவர்கள் தாக்கி வந்தனர். அதிலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சில இடங்களில் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். ஆனால் அதே கூட்டணி தற்போது திருப்பரங்குன்றத்தால் நெருக்கமாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.

திருப்பரங்குன்றம் வழக்கு
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
காங்கிரஸ் சப்போர்ட்
இந்த விவகாரத்தில் ஆளும் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்த போஸ்டில், திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவம், தமிழகத்தில் கவலைக்குரிய ஒரு போக்கைப் பிரதிபலிக்கிறது. இது அரசியல் ஆதாயங்களுக்காக மத உணர்வுகளைத் தூண்டி, பிளவுகளை ஏற்படுத்தும் திட்டமிட்ட முயற்சி என்று பார்க்கப்படுகிறது. ஒரு தவறான மற்றும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு, மாநிலத்தில் குழப்பத்தை விரும்பும் சக்திகளுக்கு மேலும் தைரியமூட்டியுள்ளது.
இந்த சூழலில், தமிழக அரசின் மற்றும் காவல்துறையின் துரிதமான, உறுதியான நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பரவலான ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுப்புணர்வுகொண்ட, பிளவுபடுத்தும், வன்முறை அரசியலுக்கு தமிழகம் ஒருபோதும் அடிபணியாது.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சக்திகள் தமிழகத்தை மதவாத ரீதியாகப் பிளவுபடுத்த மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கப்படும். நல்லிணக்கம், அன்பு, அமைதி மற்றும் துணிச்சல் கொண்ட தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மக்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தனது மண்ணை ஒரு மதவெறிக் கும்பல கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்வதை கொள்கைப் பிடிப்பும், தனது மக்கள் மீதும், மண் மீதும் அன்பும் கொண்ட எந்தப் பொறுப்புள்ள மனிதரும் மக்கள் பிரதிநிதியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றத்தை மதவெறிக் கும்பல் வன்முறைக் காடாக மாற்ற முயற்சிப்பதையும், தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான மதநல்லிணக்கத்தை பாதுகாக்கவும் தனது கருத்தைத் தெரிவித்தார்.
அது அவரது கடமை. யாருக்காவது அவர் கருத்தில் உடன்பாடு இல்லை மாற்றுக் கருத்து இருக்கிறது என்றால் அவர்களும் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் தோழர் சு.வெ. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மதவெறிக் கும்பலுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.
கொலை மிரட்டலுக்கெல்லாம் யாரும் இங்கே பயப்பட மாட்டார்கள் . இது வீரம் விளைவிளைந்த தமிழ்நாட்டு மண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மதவெறிக் கும்பலை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடன் நிற்கும் சிபிஎம்
இந்த சம்பவத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நீதிமன்ற பாதுகாப்புக்கான மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்
மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே அவர் செயல்பட்டு வருகிறார். நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை. தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். தமிழ்நாடு அரசு இதை சிறப்பாக கையாண்டு உள்ளது. தமிழக போலீஸ் இதை சிறப்பே எதிர்கொண்டு உள்ளது, என்று அவர் கூறினார்.
இந்து ஒற்றுமை என்று இந்து முன்னணி, பாஜக எடுத்த விவகாரம் கடைசியில் ஆளும் கட்சி கூட்டணி ஒற்றுமையைத்தான் உறுதி செய்துள்ளது!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications