5 நாட்கள் முக்கியம்! திருப்பதி- காட்பாடிக்கு ரயிலில் செல்ல திட்டமா! மொத்த ரயிலும் ரத்தாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி- காட்பாடி இடையே ரயில்கள் இன்று (நவம்பர் 20ஆம் தேதி) முதல் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பித்ரகுண்டாவிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு சென்ட்ரல் வரும் விரைவு ரயிலும் (17237) சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரகுண்டா செல்லும் ரயிலும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Tirupati to Katpadi trains suspended

அது போல் திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி செல்லும் பயணிகள் சிறப்பு ரயில் (07659), காட்பாடியிலிருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில் (எண் 07582), காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 06417), ஜோலார்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் (06418), அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு கடப்பா செல்லும் மெமு விரைவு ரயில் (06401), கடப்பாவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் (06402) ஆகிய ரயில்கள் நவம்பர் 20 முதல் 26-ஆம் வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து எது: நவம்பர் 20 முதல் 26ஆம் தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண் 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்காக இந்த ரயில் (16853) திருப்பதிக்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு வழக்கமான அட்டவணைபடி விழுப்புரம் சென்றடையும்.

பாதை மாற்றம்: இதனிடையே குண்டக்கல், விஜயவாடா ஆகிய கோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 24 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மதுரையிலிருந்து குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயில் (09519) காட்பாடி, பாகாலா, தர்மாவரம் வழியாக இயக்கப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து அதாவது மண்டபத்திலிருந்து நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு ஓகா செல்லும் விரைவு ரயில் (எண் 16733) ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+