மதிமுகவிலிருந்து விலகி மநீமவில் இணைந்த சிவபாலன்... முக்கிய பொறுப்பு கொடுத்த கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளராக சு. சிவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கமல் அறிவித்துள்ளார்.
சென்னை: மதிமுகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள சிவபாலனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளின் பார்வையாளராகவும் சு. சிவபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர மதிமுக செயலாளராக இருந்த சிவபாலன், அண்மையில் திடீரென கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் சு.சிவபாலன். திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது, அவரது ஆதரவாளராக வலம் வந்தவர். தொடர்ந்து திருப்பூர் நகரம் மற்றும் மாநகரச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 27 ஆண்டுகளாக அக்கட்சியில் இணைந்து பல்வேறு பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது திடீரென அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மதிமுகவில் பல ஆண்டுகாலம் இருந்த சிவபாலன், சட்டசபை தேர்தலில் திருப்பூரில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் சிவபாலன். அதற்கான வாய்ப்பு கிடைக்காது என்று தெரியவே அதிருப்தியடைந்தார். இதனையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ, எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மதிமுகவினர் மறந்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.
மதிமுகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள சிவபாலனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பார்வையாளராகவும் சு. சிவபாலன் அவர்களை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட சு. சிவபாலன் அவர்களது வருகை நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications