திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு.. கைதான கொடூரனை ஆஜர்படுத்திய போலீஸ்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையை அடுத்த ஆரம்பாக்கத்தில் 10- வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொடூரனிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்ற அந்த நபரை வரும் ஆகஸ்ட் 9 ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியை பின் தொடர்ந்து வந்த கொடூரன் இந்த படு பாதக செயலில் ஈடுபட்டான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிரவைத்தது. இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. தனது வழங்கப்பட்ட விடுமூறை நாளில், சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். கஞ்சா போதையில் இருந்த கொடூரன், சிறுமியிடம் அத்துமீறியுள்ளான்.
நேற்று கவரப்பேட்டை காவல் நிலையத்தில் விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த அவனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். முகத்தை மூடியபடி குற்றவாளியை போலீசார் அழைத்து வந்தனர்.
பூந்தமல்லி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பாக வட மாநிலத்தை சேர்ந்த அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். போலீசார் அவனை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இதென்ன உத்தர பிரதேச மாடலா? கும்மிடிப்பூண்டி சிறுமி பலாத்காரம்.. ரகசியமாக உடல் அடக்கம்! கொடுமை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications