ரயில் என்ஜின் வர தாமதம்.. டீசல் டேங்கரை இழுத்து சென்ற பொதுமக்கள்! இல்லைனா விபரீதம் ஆகியிருக்கும்
சென்னை: திருவள்ளூர் அருகே இன்று சரக்கு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. 52 வேகன்களில் 4 வேகன்களில் தீப்பற்றி எரிந்துள்ளது.. உள்ளே டீசல் இருந்த நிலையில், அவை வேகமாகப் பரவியது. இதற்கிடையே மற்ற வேகன்களுக்கும் தீ பரவாமல் இருக்க அங்கிருந்த தீயணைப்பு அதிகாரிகளே வேகன்களை பிரித்துத் தள்ளிச் சென்றுள்ளனர்.
இன்று காலை திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மிக மோசமான தீவிபத்து ஏற்பட்டது. அந்த ரயில் டீசலை ஏற்றிக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ரயில் திருவள்ளூர் அருகே சென்ற போது திடீரென அதிக உராய்வு ஏற்பட்டு இதனால் அதில் தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக இதுதான் காரணம் என எந்தவொரு தகவலும் இல்லை.

தீவிபத்து
இந்தத் தீவிபத்தால் அங்குப் பல மீட்டர் தொலைவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீவிபத்து என்பதால் ரயில் பாதைகளில் உள்ள ஒயர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு ரயில் சேவை மொத்தமாக முடங்கியது. திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இரு பாதை, புறநகர் ரயில்களுக்கு இரு பாதை என மொத்தம் 4 பாதைகள் உள்ள நிலையில், அனைத்திலும் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு நுரை மூலம் அணைக்க முயற்சி
சரக்கு ரயிலில் மொத்தம் 52 வேகன்களில் டீசல் ஏற்றிச் செல்லப்பட்டது. அதில் முதலில் ஒரு வேகனில் தீப்பற்றிய நிலையில், அது அப்படியே மெல்ல மற்ற வேகன்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மொத்தம் 4 வேகன்களுக்கு தீ பரவியுள்ளது. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அதிகாரிகளும் விரைந்தனர். இருப்பினும் டீசல் காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதால் தண்ணீர் ஊற்றி அதை அணைக்க முடியவில்லை. சிறப்பு நுரை பயன்படுத்தியே தீயை அணைக்க வேண்டி இருந்தது.
வேகனை தள்ளிய அதிகாரிகள்
இதனால் தீயணைப்பு அதிகாரிகள் சற்று நேரம் காத்திருந்தனர். அதேநேரம் தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவினால் மிகப் பெரிய விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் மற்ற வேகன்களை தீ எரியும் வேகன்களில் இருந்து பிரிக்க முடிவு செய்தனர். இருப்பினும், மற்ற வேகன்களை பிரிக்க எஞ்சின் வர தாமதமானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தீயணைப்பு அதிகாரிகளே அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மற்ற வேகன்களை பாதுகாப்பாகப் பிரித்துத் தள்ளிச் சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு மற்ற வேகன்களை பிரித்தால் தீ விபத்து இன்னும் மோசமாக மாறுவது தடுக்கப்பட்டது. இல்லை என்றால் இன்னுமே மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும் என்றே கூறுகிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த விபத்தைத் தொடர்ந்து அங்குக் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து வயதானவர்கள், சுவாசப் பிரச்சினை இருப்போரை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்து கேஸ் சிலிண்டர்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தீயை அணைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தீ விபத்தால் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 15 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நல்வாய்ப்பாக இந்த தீவிபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications