டன் கணக்கில் எரிந்து தீர்ந்த கச்சா எண்ணெய்! ரயில் தீ விபத்து.. இரவிலும் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
சென்னை: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த, டேங்கர் சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்கியிருந்தது. இந்நிலையில் ரயில் தண்டவாளம் மற்றும் மின்சார கேபிள்களை சரி செய்யும் பணியில் தெற்கு ரயில்வே இரவு பகலாக ஈடுபட்டிருக்கிறது.
சென்னை மணலி ஐஓசி பகுதியிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த சரக்கு ரயில், இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூரை கடந்துக்கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில், தடம்புரண்டிருக்கிறது. இதனால் ரயில் டேங்கர் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீ பிடித்திருக்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவியிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஏறத்தாழ அனைத்து தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
மறுபுறம் ரயில்வே அதிகாரிகள், தீ பரவாத டேங்கர் பெட்டிகளை உடனடியாக விபத்து ஏற்பட்ட ரயிலிலிருந்து அப்புறப்படுத்த தொடங்கினர். மாற்று ரயிலுக்காக காத்திராமல் அதிகாரிகளும், பொதுமக்களும், ஊழியர்களும் டேங்கர் ரயில்களை கைகளால் தள்ளி பாதுகாப்பான தூரத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் ரயில் டேங்கரிலிருந்த கச்சா எண்ணெய் அவசர அவசரமாக மோட்டார் பம்புகள் மூலம் டேங்கர் லாரிகளுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முழுவதுமான அணைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இருந்த 50 டேங்கர்களில் 27 டேங்கர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. மீதமிருந்தவற்றில் 8 டேங்கர்கள் முற்றிலுமாக கருகின. இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளம் மற்றும் மின்சார கேபிள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் இரவும் என்றும் பாராமல் கடுமையாக வேலை செய்து வருகிறார்கள். தீ விபத்து காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் அரக்கோணத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே நாளைக்குள் ரயில் வழித்தடத்தை முழுமையாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தெற்கு ரயில்வே இருக்கிறது.
திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், வேலூர், காட்பாடி மற்றும் வாலாஜா உள்ளிட்ட பகுதியிலிருந்து திருவள்ளூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வேலை, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக வருகின்றனர். எனவே தண்டவாளத்தை சரி செய்து குறைந்தபட்சம், நாளை ஒரு புறமாவது ரயிலை இயக்க வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications