“ஆட்டைக் கடித்து..” அண்ணாமலைக்கு சொலவடையால் திமுக பதிலடி.. அரசியல் பண்பாட்டை பாஜக சிதைப்பதாக புகார்
சென்னை: ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கிறது என்று தமிழிலே ஒரு சொலவடை உண்டு. அது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு முழுப் பொருத்தமாக இருக்கிறது.
அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களை அநாகரிகமாகவும் தரம் தாழ்ந்த வகையிலும் பேசுவது பா.ஜ.க. நிர்வாகிகள் பலரது வழக்கமாக இருப்பதை ஊடக விவாதங்களில் பங்கேற்கும் கருத்தாளர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள்.

அண்ணாமலை அநாகரீகம்
கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அந்த அநாகரிகப் படிக்கட்டுகளில் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார். ஊடகச் சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் பா.ஜ.க. நிர்வாகிகள், அத்தகைய கேள்வி எழுப்புவோரை நோக்கி, ஆன்ட்டி-இண்டியன் என்றும் கெட்-அவுட் என்றும் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏலம் விடுகிறார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், ஊடகத்தினருக்கு 'ரேட்' போடுவதும், ஏலமிடுவதுமாக பல முறை இழிவுபடுத்தியிருக்கிறார். இன்று மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, "மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே" என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், "உங்களைச் சாப்பிட சொல்லிட்டுத்தானே போனேன்" என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

தரம் தாழ்ந்த செயல்பாடு
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந்தரப்பை விமர்சித்துள்ளார். கழகத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது, பா.ஜ.க.வினர் எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியதை இங்கு நினைவு கூர்கிறேன்.

அரசியல் பண்பாடு
அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி, ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலையின் தொடர்ச்சியான வாய்ச் சவடால் மூலமாகத் தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. ஊடகத்தினரை இழிவுபடுத்திய பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்காக ஊடகத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனியாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன்." என்று வலியுறுத்தி இருக்கிறார்.

அண்ணாமலை ஆர்ப்பாட்டம்
திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக கூறி கடலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பத்திரிகையாளர் மைக்குகளுடன் அண்ணாமலை அருகே சென்று பேட்டி எடுக்க முயன்றனர்.

சர்ச்சை பேச்சு
அப்போது அவர்களை நோக்கி அண்ணாமலை ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "மரத்தின் மேல் குரங்கு தாவுவதைபோல் சுற்றி சுற்றி வருகிறீர்களே. சாப்பிட செல்லும்போது நான் என்ன சொன்னேன்? மரியாதையாக நின்று நீங்கள் எல்லாம் சாப்பிடுங்கள் என்று சொன்னேனா? ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்கள்" என்று காட்டமாக சொல்லிவிட்டு சென்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications