கறுப்பு சட்டையில் டி.எம். கிருஷ்ணா.. சென்னையில் அந்த பாட்டை பாடியதுமே, டக்னு திரும்பிய ஸ்டாலின்! செம
சென்னை: சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை, முதல்வர் ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் துவங்கி வைத்தார்.. அப்போது பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா பாடிய பாடல், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது பொங்கல் விழாவில்?
உலக அரங்கில் தமிழையும் அதன் பண்பாட்டையும் கொண்டுபோய் சேர்த்துவருபவர் டேவிட் ஷுல்மன்.. இவர் சமீபத்தில் கர்நாடக இசை பாடகரும் செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை வழங்கியிருந்தார். அப்போது, லுங்கி கட்டிக் கொண்டு அந்த விருதை பெற்றுக் கொண்டார் கிருஷ்ணா..

பார்வையாளர்கள்: கர்நாடக சங்கீத சபா நிகழ்ச்சி என்றாலே, பாரம்பரிய உடையுடன் தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இப்படியொரு கட்டுப்பாட்டு நிறைந்த அமைப்பின் அரங்கிற்குள் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டு, கச்சேரியே நடத்தியிருந்தது. சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தல் சம்பவத்தை செய்துள்ளார் டிஎம் கிருஷ்ணா.. சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது "சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா" என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்படுவது வழக்கமாகும்.
சென்னை சங்கமம்: அந்தவகையில், இந்த வருடத்தின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. வருகிற 17ம் தேதி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது.
இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடலில் முதல்வர் ஸ்டாலின், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா, பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடலை பாடினார்.பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதல்வர் ஸ்டாலினும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார்.. இறுதியில் டிஎம் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டினார்.
எல்லாரும் வருவாங்க: பிறகு, பிரபல சேனல் ஒன்றுக்கு இதுகுறித்து பிரத்யேக பேட்டி தந்த டி.எம்.கிருஷ்ணா, "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்.. சுய புத்தியை பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் என்பது எப்பொழுதும் தேவை தானே? இப்பொழுது ஏன் அதிகமாக தேவையென்றால், ஒரே மாதிரிதான் எல்லாரும் யோசிக்கணும், ஒரே மாதிரிதான் எல்லாரும் ட்ரெஸ் போட்டுக்கணும் என்பது போன்ற சிந்தனைகள் அதிகமாக பரப்புவதால், இதை இன்னும் அடிச்சு சொல்லனுந்தானே?
சமத்துவத்தை பற்றி பேசணும், பாடணும், கொண்டாடனும்... மக்களோட சேரணும். எல்லா மக்களும், எல்லா கலைகளும் ஒன்று என்ற கருத்தை எந்தவிதமாக தர முடியுமோ அப்படி தருகிறேன். அதில் பெரியார் வருவார், அம்பேத்கர் வருவார், அயோத்திதாச பண்டிதர் வருவார் என எல்லாரும் வருவாங்க" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications