தமிழகத்தில் தரை தட்டிய தமிழ் மாநில காங்கிரஸ் - என்ன செய்யப்போகிறார் ஜி.கே வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளது.
சென்னை: அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாமல் வாஷ் அவுட் ஆகியுள்ளது. அடம் பிடித்து ஆறு தொகுதிகளை வாங்கி அப்படியே எதிர்கட்சிகளுக்கு வாரி கொடுத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஜி.கே வாசனின் அரசியல் பயணம் இனி எதை நோக்கியதாக இருக்கும் என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் தமாகாவை ஆரம்பித்த ஜி.கே. வாசனின் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்து வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து பாதி செல்வாக்கை இழந்தார் ஜி.கே. வாசன், இந்த சட்டசபைத் தேர்தலில் மீதியையும் இழந்து தொடர் சறுக்கலை சந்தித்து வருகிறார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிமுக உடன் கூட்டணி அமைப்பதை கண்டித்தார் ஜி.கே. மூப்பனார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் சின்னமான சைக்கிளை பிரபலப்படுத்திய பெறுமை அண்ணாமலை படத்திற்கு அதிகம் உண்டு. ஒரு மாதத்தில் மக்கள் மனதில் பதித்த சைக்கிளுக்கு மக்கள் பெருவாரியான ஆதரவை அளித்தனர். திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமாகாவிற்கு 39 இடங்கள் கிடைத்தன.
யாருடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கிறது என்று கோபித்துக்கொண்டு கட்சி தொடங்கினாரோ அதே ஜெயலலிதா உடன் 2001ஆம் ஆண்டு கூட்டணி குறித்து பேசினார். சில மாதங்களிலேயே மூப்பனார் மரணமடைய தமாகாவின் தலைவரானார் ஜி.கே. வாசன்.
2002ஆம் ஆண்டு கட்சியை தாய் கழகமான காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அடுத்த சில ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனி ஆவர்த்தனம் செய்து வந்தார். 1996ல் தமாகா கட்சி உருவான போது இருந்த செல்வாக்கு 2014ஆம் ஆண்டு ஜி.கே வாசன் தமாகாவை மீண்டும் துவக்கிய போது கிடைக்கவில்லை.
2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய போது இரட்டை இலையில் போட்டியிடச்சொன்னார் ஜெயலலிதா. அதை ஏற்காத ஜி.கே. வாசன், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து படுதோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்த ஜி.கே. வாசன் 12 தொகுதிகளைக் கேட்டார். அவருக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை, திரு வி.க.நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார் ஜி. கே. வாசன். இரட்டை இலை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் களமிறங்கினர். 6 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட தமாகா வேட்பாளர்கள் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாஜக கட்சியில் இருந்து கூட சில வேட்பாளர்கள் சட்டசபைக்குள் எம்எல்ஏக்களாக நுழைந்துள்ளனர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கட்சி தொடங்கிய போது 39 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பிய தமாகா இப்போது படிப்படியாக தேய்ந்தே விட்டது. இனி ஜி.கே. வாசனின் பயணம் எதை நோக்கியதாக இருக்கும். தனது கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறார் ஜி. கே. வாசன் என்பது அரசியல் நோக்கர்களின் கேள்வியாகும்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications