பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சதம் அடித்த சிங்கங்கள்..கணக்கில் 3649 பேர்.. தமிழில் யாருமில்லை
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3649 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் , 11ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 4ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 4,04,904 பேர் மாணவர்கள், 4,30,710 பேர் மாணவிகள் ஆவர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள் கடைசி இடத்தையும் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3649 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3584 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்னர்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் வரும் 23ஆம் தேதி வரைக்கும் துணை தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications