சிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுவிற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

TN 12th result 2019: 34 out of 45 Prisoners have passed in the exam

12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழகம் மற்றும் புதுவை முழுக்க மொத்தம் 45 கைதிகள் தேர்வு எழுதினார்கள். சென்ட்ரல் ஜெயில், பாளையங்கோட்டை ஜெயில், புழல் ஜெயில், சேலம் ஜெயில் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 45 பேர் இந்த பிளஸ் 2 தேர்வை எழுதினார்கள்.

இந்த கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 20 பேர் 75%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+