நாளை மறுநாள்.. விவசாயிகளே ரெடியா? ஒரு வாரத்திற்கு தொடர்ந்து.. விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம்
சென்னை: நாளை முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் 38.25 இலட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்ட (பிஎம் கிசான்) பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டம்
24.04.2022 அன்று நடக்கும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப்பொருளாக பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கப்படும்.

கடன் அட்டை
விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ரூபாய் 1 இலட்சத்து 60 ஆயிரம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்கு தேவையான நிதி உதவி பெறவும் முடியும். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ. 3 இலட்சம் வரையிலும், மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ. 2 இலட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெற முடியும்.

7 சதவீதம் வட்டி
விவசாய கடன் அட்டை திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பைப் பொறுத்து மாறுபடும்.

எந்தெந்த வங்கிகள்
விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மண்டல ஊரக வங்கிகள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம அளவில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் பெறலாம்.
விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications