உறுதியான பாஜக- அதிமுக கூட்டணி: தவமாய் தவமிருக்க போகும் கூட்டணி கட்சிகள்- திமுகவுக்கு செம்ம குஷி!
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக- பாஜக இடையேயான கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக தலைமையில் பாஜக அல்லாமல் மெகா கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாம் என 'மனப்பால்' குடித்த மதில்மேல் பூனைகளாக உலா வந்த திமுக கூட்டணி கட்சிகள், இப்போது வாலை சுருட்டிக் கொண்டு அடக்கிவாசிக்கத்தான் வேண்டும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெற உள்ளது. தற்போதே அரசியல் களம் அதிரிபுதிரியாக அமர்க்களப்படத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

பாமக என்னவாகும்?
இதில் பாமக, தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்தே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிஸ்மிஸ் செய்தார் எனவும் கூறப்படுகிறது.
திமுகவை மிரட்டி வந்த கூட்டணி கட்சிகள்
இன்னொரு பக்கம், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போதைய நிலையில் இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தவாக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்ற நிலைமை இருந்த வரையில் திமுக கூட்டணியை உடைத்துக் கொண்டு அதிமுக கூட்டணி பக்கம் போவதற்கு அதன் கூட்டணி கட்சிகள் சில தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தன; பாஜகவுடன் கூட்டணி வைக்காத அதிமுகவுக்கு போய்விடுவோம் என திமுக தலைமைக்கு பல்வேறு பிரச்சனைகள் மூலம் மிரட்டல் விடுத்தும் வந்தன இந்த கூட்டணி கட்சிகள்.
அதிமுக- பாஜக கூட்டணி
ஆனால் தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துவிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- அமித்ஷா சந்திப்புக்குப் பின்னர் முறைப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது.
அடங்கிப் போகும் திமுக கூட்டணி கட்சிகள்
இதனால் 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி; திமுக கூட்டணி; நடிகர் விஜய் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உருவாகிவிட்டது. மேலும் இதுநாள் வரை, பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு ஓடிவிடுவோம் என திமுகவை மிரட்டிய கூட்டணி கட்சிகள் இனி கப்சிப் என அமைதியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
திமுகவின் மெகா வலிமையான கூட்டணி
திமுக கூட்டணியில் இப்போதிருந்தே கவுரவமான இடத்தைப் பெற அடக்கித்தான் வாசித்தாக வேண்டிய நெருக்கடியும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உருவாகிவிட்டது. பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால் மேலும் சில கட்சிகள், திமுக கூட்டணியை நோக்கி படையெடுத்துதான் ஆக வேண்டும். ஆகையால் திமுக, மிக வலிமையான மெகா கூட்டணியோடுதான் 2026 தேர்தலை சந்திக்கப் போகிறது.
குஷியோ குஷியில் திமுக
தற்போதைய பாஜக- அதிமுக கூட்டணி அறிவிப்பால், இதுநாள் வரை தங்களை மிரட்டிய கூட்டணிக் கட்சிகள் இனி அமைதியாக இருந்துவிட்டு போகவேண்டும் என்பதால் திமுக தலைமையும் ஏக மகிழ்ச்சியில் திளைக்கிறதாம். தொகுதிப் பங்கீடு முதல் அனைத்து விஷயங்களிலும் திமுக தலைமை சொல்வதைத்தான் கூட்டணி கட்சிகள் கேட்டாக வேண்டும்; இல்லை எனில் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்; அல்லது தனித்து நின்று தற்கொலை செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு அந்த கட்சிகள் தள்ளப்பட்டுவிட்டன என்பதுதான் கள யதார்த்தம்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications