கவுதமி, குஷ்பு வந்து சேர்ந்தாச்சு.. அடுத்து ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜூன் பாஜக ஜோதியில் ஐக்கியமா?
சென்னை: சினிமா பிரபலங்களை வரிசை கட்டி இழுக்கும் ரேஸில் பாஜகதான் முதலிடத்தில் இருக்கிறது. கவுதமி, குஷ்பு, நமீதாவை தொடர்ந்து தற்போது ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜூனையும் பாஜக இழுக்கிறதாம்.
Recommended Video
இந்துத்துவா சித்தாந்தம் பேசி கட்சி வளர்த்த பாஜக இப்போது யூ டர்ன் அடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளை காலி செய்வது, பிற கட்சிகளில் இருந்து ஆட்களை கூண்டோடு இழுத்து ஒரு கட்சியாக உருவாகுதல் என அத்தனை பார்முலாக்களையும் பாஜக கடைபிடிக்கிறது.

பாஜகவில் சினிமா பிரபலங்கள்
அதேபோல் கூண்டோடு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்ப்பதில் கை தேர்ந்த கட்சியாக இருக்கிறது பாஜக. மேலும் சினிமா பிரபலங்கள் யாராக இருந்தாலும் அள்ளிப் போட்டுக் கொள்வதில் தமிழக பாஜகதான் டாப்.

பாஜக நட்சத்திரங்கள்
ஏற்கனவே ராதாரவி, கங்கை அமரன், கவுதமி, குஷ்பு, ஆர்கே சுரேஷ், நமீதா, கஸ்தூரி ராஜா என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் பாஜகவில் ஐக்கியமாகினர். இவர்களில் ஒன்றிரண்டுதான் இப்போது சீனிலேயே இருக்கின்றனர். மற்றவர்களை எல்லாம் பாஜக கண்டு கொள்வதும் இல்லை.

பாஜக தலைவர்களுடன் அர்ஜூன் சந்திப்பு
இந்த நிலையில் சென்னையில் பாஜக தலைவர்களை திடீரென நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசியுள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோரை நேற்று நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார்.

அர்ஜூன் மீது பாலியல் சர்ச்சை புகார்
இதனால் நடிகர் அர்ஜூனும் பாஜகவில் இணையக் கூடும் என தகவல்கள் பரவுகின்றன. ஏற்கனவே மீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜூன் தம்மிடம் தவறாக நடந்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு புகார் கூறியிருந்தார். அத்துடன் அர்ஜூனின் நண்பர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும் ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications