காலங்காத்தாலேயே புதுசிக்கல்.. நிறைய பூத்களில் குழப்பம்.. திணறிய வாக்காளர்கள்..!

வாக்குப்பதிவு எண்ணிக்கை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமே இன்று ஓட்டுப்போட்டு வரும் நிலையில், புது சிக்கல் ஒன்று முளைத்துள்ளது.. பூத் ஸ்லிப் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வழங்கப்படவே இல்லை.. இது பல குழப்பத்தை காலையிலேயே ஏற்படுத்த துவங்கி விட்டது.

தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன... கிட்டத்தட்ட 1 லட்சத்து 59,165 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தலா 91,180 எண்ணிக்கையில் உள்ளன...

தேர்தல் பணிக்காக 1.58 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இப்போது தொற்று அதிகமாக உள்ளதால், பாதுகாப்பாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

அதன்படியே பாதுகாப்பாகவும் நடந்து வருகிறது.. இந்த முறை, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.. அதற்காக வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை, வாக்காளர் அடையாள அட்டை தேவையில்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் போதும் என்பன போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சீரியல்

சீரியல்

இந்நிலையில், 7 மணியில் இருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.. எனினும், இந்த பூத் ஸ்லிப் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிகிறது.. இதனால் தங்களது பூத்தைத் தேடி பலரும் அலைய நேரிட்டது... அதிலும் சீரியல் நம்பர் தெரியாமல் பலர் திணறி போய் விட்டனர்...

பூத்கள்

பூத்கள்

இதில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.. அதிக அளவில் பூத்துகள் அமைக்கப்பட்டதால் வாக்காளர்களுக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும் இணையதளத்திலும் பார்க்கும் வசதி இருந்தாலும், அதுகுறித்து தெரியாமல் வந்த பலர் திணறும் நிலை காணப்பட்டது... நல்லவேளையாக, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தற்காலிக முகாம் அமைத்துள்ள கட்சியினர்தான் இவர்களுக்கு எல்லாம் உதவும் நிலை காணப்படுகிறது!

பழுது

பழுது

ஒருசில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் பழுதாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.. அவினாசி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 218 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இது வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. அதேபோல் மயிலாடுதுறை திருவிழந்தூர் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+