சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிப். 2-ல் தமிழக சட்டசபை கூட்டம்.. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 2-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 2-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சட்டசபைக்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னை தலைமை செயலகம், எம்.எல்.ஏ. விடுதி, கலைவாணர் அரங்கம் ஆகிய இடங்களில் நேற்று முதல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

TN Assembly meeting to begin on the feb 2nd, a corona test is being conducted on the CM and Deputy CM

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்தில் 110 பேர், எம்.எல்.ஏ. விடுதியில் 89 பேர், கலைவாணர் அரங்கில் 237 பேர், முதல்- அமைச்சர் அலுவலகத்தில் 70 பேர், பத்திரிகையாளர்கள் 47 பேர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?

இன்றும், நாளையும் கொரோனா பரிசோதனை முகாம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி தெரியவில்லை. பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சபாநாயகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

English summary
With the Tamil Nadu Assembly meeting set to begin on the 2nd, a corona test is being conducted on the Chief Minister and Deputy Chief Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X