ஆளுநரின் அதிகாரம் அதிரடி பறிப்பு! பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க மசோதா நிறைவேற்றம்!
சென்னை: தமிழக அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இம்மசோதாவுக்கு சட்டசபையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதன் மூலம் தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் தன்னிச்சையாக கூட்டியிருப்பதற்கு பதிலடியாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

கிடப்பில் சட்டசபை தீர்மானங்கள்
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டசபை தீர்மானங்கள், ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்டகாலம் கிடப்பில் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

போராட்டம்
நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறவும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கறுப்பு கொடிகள் வீசப்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தது.

உதகையில் மாநாடு
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டியில் கூட்டியிருக்கிறார். தமிழக முதல்வர் அல்லது உயர் கல்வித்துறை அமைச்சர் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் தமிழக அரசை புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக ஆளுநர் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது மாநில அரசை அவமதிக்கும் செயல்; ஆளுநருக்கு அப்படியான எந்த ஒரு அதிகாரமும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிரடி மசோதா நிறைவேற்றம்
இதனிடையே ஆளுநரின் இந்த போக்குக்கு பதிலடி தரும் வகையில் தமிழக அரசு சட்டசபையில் இன்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதாவது தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்தான் தற்போது வரை நியமித்து வருகிறார். ஆளுநருக்கான இந்த அதிகாரத்தைப் பறித்து இனி தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்மசோதா மீது விரிவான விவாதமும் நடைபெற்றது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications