சபாநாயகரை புகழ்ந்த ஓபிஎஸ்.. அப்ப நீங்க கேள்வி கேட்க வரலயா? கலாய்த்த அப்பாவு! டென்ஷனுக்கு பிறகு கூல்!
சென்னை : தவாக தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவையில் சத்தம் போட்டு பேசியதைத் தொடர்ந்து அவரை சபாநாயகர் அப்பாவு எச்சரித்த நிலையில், பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரை புகழ்ந்தார். அதற்கு உடனடியாக நகைச்சுவையாக கமெண்ட் அடித்தார் சபாநாயகர் அப்பாவு.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கோபமாகப் பேசினார். பேரவைத் தலைவரே இது நியாயமா? 3 நாட்களாக அவையில் துணைக்கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன். தர மறுக்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடரில் வேல்முருகனுக்கு 4 துணைக் கேள்விகளுக்கு அனுமதி அளித்திருக்கிறேன். முன்வரிசையில் உள்ளவர்களுக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் தங்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எந்த மரபும் இல்லை. இங்கே ஒரு கேள்வி கூட கேட்காமல் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு திரும்பத் திரும்ப வாய்ப்புகள் வழங்கப்படாத . உங்களைப் போல் 20 பேர் கேட்டிருக்கிறார்கள். இது போன்று அவையில் பேசக்கூடாது. சத்தம் போடக்கூடாது என எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து தானும் பேச வேண்டும் என வாய்ப்பு கேட்க, சபாநாயகர் அப்பாவுக்கு அவருக்கு பேச வாய்ப்பு வழங்கினார். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "பேரவைத் தலைவர் அப்பாவு ஆசிரியராக இருந்தவர் எனத் தெரியும். அவர் சில நேரங்களில் கனிவானவராகவும், சில நேரங்களில் கண்டிப்பானவராகவும் இருந்து அவையை நடத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, அப்ப நீங்க துணைக் கேள்வி கேட்க வரலையா? என நகைச்சுவையாக கேட்டுவிட்டு சிரித்தார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. சற்று முன்னர் காட்டமாகப் பேசிய சபாநாயகர் அப்பாவு, உடனே தனது ஸ்டைலுக்கு திரும்பி ஓபிஎஸ்ஸை கலாய்த்தது உறுப்பினர்களால் ரசிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications