எடப்பாடியை விடுங்க.. ஸ்டாலின் என்ன செய்தார்னு பார்த்தீங்களா.. 10 வருட வரலாற்றில் இதுதான் முதல் முறை!
ஜனநாயக மாண்பை கடைப்பிடிக்கும் திமுக அரசை அரசு அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.
சென்னை: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு, அரசு அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அத்துடன் திமுகவின் ஜனநாயக மாண்பை சீனியர் ஐஏஎஸ்கள் உளமார பாராட்டி கொண்டிருக்கிறார்கள்..!
தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில், 110 விதிகள் என்றால் என்ன? என்பது பற்றி பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு சரியான புரிதல் இருப்பதில்லை.
ஒவ்வொரு முறை ஆட்சியின்போது பேரவையில் அறிவிப்புகள் வெளியாகிறதா என்று கவனிக்கப்பட்டு வருகிறதே தவிர, 110 விதிகளை யாரும் அறிய முன்வருவதுமில்லை.

அதென்ன 110 விதி?
பொதுவாக மக்களுக்காக கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டங்களானாலும் சரி, அதை அமல்படுத்துவதற்கு முன்பு சட்டமன்றத்தில் விரிவாக அத்திட்டத்தை பற்றி விவாதிக்கப்படும்... அந்த விவாதத்தின் சாதக - பாதகங்களை அறிந்தே திட்டங்களும் அறிவிக்கப்படும்.. அதன்பிறகு செயல்படுத்தப்படும்.. இதுதான் இயல்பு.

விவாதங்கள்
ஆனால் மாநில அரசால் முன்மொழியப்படும் ஒரு முக்கியமான திட்டம் அல்லது பிரச்சனை குறித்து உடனே முடிவெடுக்க வேண்டும் என்றால், விவாதங்களுக்கு அவ்வளவாக டைம் இருக்காது.. சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் இது பற்றி விவாதித்து முடிப்பதற்குள் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது, அல்லது நேரம் வீணாகும்.. விவாதமே செய்தாலும் சில சமயம், திட்டம் குறித்த நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளதாக அரசு கருதினால், 110 விதியை பயன்படுத்தி கொள்ளாம்..

அறிவிப்புகள்
இந்த 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி, அவை உறுப்பினர்கள், அல்லது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது.. முழுக்க முழுக்க மாநில அரசே அறிவித்து, அதுவே செயல்படுத்திவிடும்.. அப்படித்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011 முதல் 2016 வரையில் இந்த விதியின் கீழ் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார்..

அதிமுக
அதாவது, இந்த ஆட்சி காலத்தில் 181 அறிவிப்புகளை ஜெ.வெளியிட்டார். அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஜெ.ரூட்டையே கையில் எடுத்தார்.. 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை வெளியிட்டார்.. 110-ன் விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவை எல்லாம் செய்து முடிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.. ஒருமுறை எடப்பாடியிடம், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முக ஸ்டாலினே கேள்வி எழுப்பியிருந்தார்..

ஐ. பெரியசாமி
அவ்வளவு ஏன், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் விமர்சித்திருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், தற்போது மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.. இன்றைய கூட்டத்தில், பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசினார்...

பாராட்டு
அப்போது சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவில் பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதைதான், அரசு அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.. இந்த சட்டப்பேரவையின் மரபுகள் திமுக ஆட்சியில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கருத்து கூறிவருகிறார்கள்.. குறிப்பாக, மிக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள், இன்று பேரவையில் நடந்ததையே உதாரணமாக சுட்டிக்காட்டி பாராட்டுகிறார்கள்..

அமைச்சரவை
அதுமட்டுமல்ல, அதிமுகவின் கடந்த காலத்தில், முதல்வர்கள் மட்டுமே (ஜெயலலிதா, எடப்பாடி) 110 விதியின் கீழ் வெளியிட்டு வந்த நலத்திட்ட அறிவிப்புகளை, மீண்டும் பழைய ஜனநாயக முறைப்படியே துறைசார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களே அறிவித்துக்கொள்ளும்படி முதல்வர் முக ஸ்டாலின் அனுமதித்துள்ளது, பல்வேறு தரப்பினரையும் ஈர்த்து வருகிறது.. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்பை கூடுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார் என்பதை நினைவு கூர்ந்து வருகின்றனர்..

திட்டங்கள்
சுருக்கமாக சொல்லப்போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது, தன்னுடைய மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது, அம்மக்களுடன் அதாவது மக்களின் பிரதிநிதிகளான பேரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து, அதன்பிறகு அறிவிப்பதே மிகச்சிறந்த செயலாகும்.. ஸ்டாலின் ஒரு படிமேலேபோய், சம்பந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சர்கள் மூலமே திட்டங்களை அறிவிக்க வைத்துள்ளார்.. "ஜனநாயகம்" என்ற தூணை திமுக அரசு வெகுநேர்த்தியாக எட்டிப்பிடித்துவிட்டது என்றே சொல்லலாம்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications