திமுகவின் அறிவாலய சுவரை சும்மா தொட்டுதான் பாருங்க.. பாஜக அண்ணாமலைக்கு நடிகர் போஸ் வெங்கட் சவால்
சென்னை: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை விடமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த நடிகர் போஸ்வெங்கட், அண்ணா அறிவாலயத்தின் சுவரை சும்மா தொட்டுதான் பாருங்க என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டு பாஜகவின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பதவியில் இருந்து செல்லும் போது திமுகவின் தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டோன் என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருக்க வேண்டும்; பாஜக தலைவராக அண்ணாமலையும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஒரு மனிதனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டால் அழிவு ஆரம்பம் என அர்த்தம்; ஆணவத்தின் உச்சத்தில்தான் முதல்வர் பேசுகிறார்; இன்னொரு கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வாராம்.. உங்களுக்கு பின் உதயநிதி, இன்பநிதி என நீங்கள்தான் துண்டை போட்டு வைத்திருக்கிறீர்கள் என்றும் அண்ணாமலை காட்டமாக பேசினார்.
அத்துடன் . ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அண்ணாமலை பேசினார்.
அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல.. அது ஒவ்வொரு ஏழை தி. மு. க தொண்டனின் குருதி,நம்பிக்கை. நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம்.. வாருங்களேன் தோழர் அண்ணாமலை… /சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்.. / @annamalai_k
— Bose Venkat (@DirectorBose) February 12, 2025
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக நடிகர் போஸ் வெங்கட் தமது எக்ஸ் பக்கத்தில் அளித்த பதில்: அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல.. அது ஒவ்வொரு ஏழை தி. மு. க தொண்டனின் குருதி,நம்பிக்கை. நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம்.. வாருங்களேன் தோழர் அண்ணாமலை... /சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்.. / . இவ்வாறு அண்ணாமலைக்கு நடிகர் போஸ் வெங்கட் சவால் விடுத்துள்ளார்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம்












Click it and Unblock the Notifications