அணுகுமுறை 'ஸ்பெசல்' தமிழிசை .. இனி தமிழக பாஜகவுக்கு நிச்சயம் பெரிய நஷ்டம் தான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகப்பேறு மருத்துவர் முதல் தெலுங்கானா ஆளுநர் வரை... தமிழிசை கடந்து வந்த பாதை

    சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தமிழக பாஜகவுக்கு மிகப் பெரிய முகத்தைக் கொடுத்தவர். தமிழக பாஜகவுக்கு இது பெரிய நஷ்டம்தான்.

    அரசியலில் அதிரடியான பதில்களையும், லாவகமான சமாளிப்புகளையும், திறமையாக எதையும் எதிர் கொள்ளக்கூடியவர் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.

    இப்போது அவர் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டு, தெலுங்கானா மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் இனி அவரது சவால் பேச்சுக்களை தமிழக மக்களும், பாஜக தொண்டர்களும் மிஸ் செய்யப்போகிறார்கள்.

    பாஜக தலைவர் யார்

    பாஜக தலைவர் யார்

    தமிழிசை செளந்திரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து பேசும் போது அடுத்த பாஜக தலைவர் யாராக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தமிழிசை இனி நான் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    முதல் ஆளாக பதிலடி

    முதல் ஆளாக பதிலடி

    ஆனால் தமிழிசை இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர் மற்றும் பிரபலங்கள் பாஜகவை விமர்சித்தாலும் அதற்கு முதல் ஆளாக உடனுக்குடன் பதிலடி கொடுத்தவர். பாஜக கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் திமுக, காங்கிரஸ் உள்பட எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தமிழிசையின் அரசியல் அணுகுமுறை பிடிக்கும்.

    தனிநபர் விமர்சனங்கள்

    தனிநபர் விமர்சனங்கள்

    கடுமையான விமர்சனங்களுக்கு கொள்கை ரீதியாகவே பதிலடி கொடுத்து வந்தவர் தமிழிசை. தனிப்பட்ட முறையிலோ மற்றும் கடுமையாக ரீதியாகவோ யாரையும் விமர்சித்து தமிழிசை பதில் அளித்தது கிடையாது. தன்னைப் பற்றிய தனிநபர் விமர்சனங்களையும் தனது பேச்சுத்திறமையால் லாவகமாக கையாண்டு வெற்றி பெற்றவர்.

    பாஜகவின் முகம் தமிழிசை

    பாஜகவின் முகம் தமிழிசை

    தமிழகத்தில் மத்திய அரசின் எல்லா திட்டங்களுக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரங்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்த போது, அதற்கு தக்க பதிலடிகளை கொடுத்துள்ளார் தமிழிசை. தமிழகத்தில் பாஜக என்றால் சட்டென்று ஞாபகம் வரும் ஒரு முகமாக தமிழிசை மாறினார். இதேபோல் எந்த பிரச்சனை என்றாலும் சமூக வலைதளங்களில் முதல் கருத்தை தெரிவிப்பவர் என்றால் அது தமிழிசை தான்.

    அதிமுகவுடன் தோழமை

    அதிமுகவுடன் தோழமை

    ஆளும் அதிமுக தலைவர்களுடன் தோழமையாக பாஜகவை வழிநடத்தி சென்றதோடு, பாஜகவைச் சேர்ந்த கடைமட்ட தொண்டர்களும் எளிதில் அணுகக்கூடியவராகவும் எளிமையானவராவும் இருந்த தமிழிசை தமிழகத்தில் இருந்து தெலுங்கானாவுக்கு செல்வது நிச்சயம் தமிழக பாஜகவினருக்கும், ஆளும் அதிமுக அரசுக்கும், பெரும் இழப்புதான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+