நாளை முதல் மீண்டும் அண்ணாமலை யாத்திரை!பியூஷ் கோயல் பங்கேற்பு-அதிமுக உறவு முறிவு ரியாக்ஷன் தெரியும்?
சென்னை: அண்ணா திமுகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னர் நாளை முதல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பாதயாத்திரை செல்கிறார். திருப்பூர் அவினாசியில் தொடங்கும் அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பரப்புவதற்காக அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாதயாத்திரை மேற்கு மாவட்டங்களில் நடந்து வந்தது.

அதிமுக கூட்டணி முறிவு: மேற்கு மாவட்டங்களில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்ட போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் அதிமுக- பாஜக இடையே பெரும் பிரளயம் வெடித்தது. இந்த பஞ்சாயத்தில் டெல்லிக்கு அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். இதனால் அண்ணாமலையின் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி பறிபோகும் என கூறப்பட்டது.
திடீர் ஒத்திவைப்பு: பின்னர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த அண்ணாமலை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் அண்ணாமலையின் பாதயாத்திரை கேள்விக்குறியானது. இதனிடையே டெல்லி தலைமை, அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேசாமல் 'கடந்து செல்ல' அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கனத்த மவுனம் காத்து வருகின்றனர்.

3-ம் கட்ட பாதயாத்திரை: தற்போது நாளை முதல் மீண்டும் அண்ணாமலை தமது பாதயாத்திரையை தொடங்குகிறார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, பல்லடத்தில் அக்டோபர் 19, திருப்பூர் தெற்கு, வடக்கு தொகுதிகளில் அக்டோபர் 20-ல் பயணம் மேற்கொள்கிறார். திருப்பூரில் 3-வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.
டெல்லி கண்காணிப்பு?: அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிந்தைய அண்ணாமலையின் பாதயாத்திரையில் பொதுமக்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. டெல்லி தலைமையும் இந்த 3-ம் கட்ட யாத்திரையை உன்னிப்பாக கவனிக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டார தகவல்கள். தற்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பதால் டெல்லியின் கண்காணிப்பில் இந்த யாத்திரை நடத்தப்பாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications