"டி.ஆர் பாலுவை முதல்வராக்குங்கள்".. பாஜக கோட்டை முற்றுகை போராட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்! தடதட சென்னை
திமுக அரசை கண்டித்து பாஜக கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளது
சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத, திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக, கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறது.. இந்த போராட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமமலை, திமுகவின் மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது... இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பை, தமிழக அரசும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது கேட்டுக் கொண்டிருந்தார்.

நிர்மலா சீதாராமன்
இதற்கு நம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அப்போதே ஒரு பதிலை தந்தார்.. "கடந்த 8 வருடங்களில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைப் பலமுறை உயர்த்தியபோதும், ஒருமுறை கூட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், ஆலோசனையும் செய்யாமல், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியது. இப்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியைக் குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமே இல்லை" என்று கூறியிருந்தார்.

பாஜக
எனினும் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கின.. குறிப்பாக தமிழக பாஜக இந்த விஷயத்தையும் கையில் எடுத்தது.. அதிலும் மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போதெல்லாம், திமுக மீது இந்த விமர்சனத்தை முன்வைத்து கொண்டே இருந்தார்.

அண்ணாமலை அறிவிப்பு
குறிப்பாக, "அரசியல் லாபத்துக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. நாங்கள் புதிதாக எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதேபோல, கேஸ் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும்... 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்" என்று அதிரடியாக அறிவித்தார்.

ரெடியாகிறது பாஜக
ஆனால், அண்ணாமலை விதித்த 72 மணி நேர கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், முற்றுகை குறித்த பேச்சே எடுக்கவில்லை.. இதுசம்பந்தமாக கமலாலயத்தில் ஆலோசனையும் நடந்தது.. அந்த ஆலோசனையில் எப்படியும் முற்றுகை போராட்டத்தை நடத்திவிடுவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.. அதன்படி, மே 31-ம் தேதி அதாவது இன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..
Recommended Video

பரபரப்பு
அதன்படி, ஏற்கனவே 72 மணி நேரம் கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்றைய தினம் கோட்டை முற்றுகை நடத்தப்பட்டு வருகிறது.. இதற்காக பாஜகவினர் தமிழகம் முழுவதும் இருந்து அணி திரண்டு வந்தனர்.. காலை 11 மணிக்கு எழும்பூரில் இருந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியும் மேற்கொண்டனர்.. இந்த போராட்டமும் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது... இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்..

வாய் சவடால்
இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, 2 முறை நம் பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளார்.. அதிலும் வெறும் 6 மாதத்தில் 17 ரூபாய் விலை குறைத்து காண்பித்திருக்கிறார்.. ஆனால், விடியாத அரசு, சினிமாஅரசு, வாய் சவடால் விடும் அரசு, பெட்ரோல் டீசல் விலையை இன்னமும் குறைக்கவில்லை.. 4 நாட்களுக்கு முன்பு திமுகவின் ஆர்எஸ் பாரதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

டிஆர் பாலு
அதில், "ஏன் பெட்ரோல் டீசல் விலை பற்றி கேட்கிறீங்கள்? யார் தேர்தல் அறிக்கை எழுதினார்களோ, அங்கே போய் கேளுங்கள் என்றார்.. இந்த விஞ்ஞான விஷயத்தை அங்கு சொல்லி உள்ளார்.. அவர் சொன்னதை நாங்கள் ஏற்கிறோம்.. நாங்கள் என்ன சொல்றோம் என்றால், அந்த தேர்தல் அறிக்கை எழுதின டிஆர் பாலுவை முதல்வராக ஆக்குங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.. ஸ்டாலினுக்கு எதிரியே ஆர்எஸ் பாரதிதான்" என்று உரையாற்றினார்.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம்











Click it and Unblock the Notifications