"புளூகுமூட்டை".. மோடிக்கு நல்ல பேர் வந்துடக்கூடாது.. அப்படித்தானே.. திமுகவை கேள்வி கேட்ட எல்.முருகன்
எல்.முருகன் ஆளுநர் உரை குறித்து அறிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கவர்னர் உரை திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட புளுகு மூட்டைப்பிரகடனம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்: "புதிய அரசு அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக கவர்னர் நிகழ்த்திய உரை, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வுரையானது தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே, ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டுள்ளது.
சாத்தியமே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்திருந்தும், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றும் நோக்கில் "நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்று தி.மு.க தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது கவர்னர் உரையில் நீட் தேர்வு ரத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

மானியம்
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்றும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் கவர்னர் உரையில் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

திமுக
ஏழைத் தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கவர்னர் உரையில் அதுபற்றி பேச்சு, மூச்சே இல்லை. இது ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

மீனவ சமுதாயம்
இது வருந்தத்தக்கது. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்கள். ஆனால் இப்போது அது பற்றி கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது, ஓட்டுக்காக மீனவ சமுதாய மக்களையும். தி.மு.க வஞ்சித்துவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

சுய உதவி குழுக்கள்
சுய உதவி குழுக்களின் கூட்டுறவு சங்க கடன், வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, இப்போது கவர்னர் உரையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது. ஒட்டுமொத்த தமிழக தாய்மார்களையும் ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துள்ளது. இதுபோல நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள். அதை நம்பிய மக்களையும் இப்போது ஏமாற்றி விட்டார்கள்.

சுங்கச்சாவடி
தமிழகத்தில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் நீக்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. அதுபற்றியும் கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தி.மு.கவினர் மக்களிடம் சொல்லி வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்கள். ஆனால் இப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது பற்றி கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமையல் எண்ணெய்
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிமெண்ட் விலை, மூட்டைக்கு 370 ரூபாயாக இருந்தது. அது ஒரே இரவில் 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பகல் கொள்ளை. செங்கல், ஜல்லி, மணல், கம்பி உள்பட அனைத்து கட்டுமான பொருட்கள் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணை முதல் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, எந்த அறிவிப்பும் இல்லை

வேலை வாய்ப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து சிறு, குறு தொழில்களும் முடங்கிப்போயுள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆக்கபூர்வமான எந்த அறிவிப்பையும் கவர்னர் உரையில் வெளியிடவில்லை. அதே போல, வேலைவாய்ப்பை இழந்து நிற்கதியாய் நிற்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் கவர்னர் உரையில் அறிவிக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோதாவரி - காவிரி
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு விரிவான அறிக்கையை தயார் செய்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. அந்தத் திட்டம் பற்றி கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மோடி அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தத் திட்டம் கவர்னர் உரையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

புறக்கணிப்பு
மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை தி.மு.க அரசு புறக்கணிக்கிறதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.ஒருவேளை இந்த திட்டம் புறக்கணிக்கப்ப்படுமானால், இது தமிழக விவசாயிகளுக்கு. தி.மு.க அரசு இழைக்கின்ற மிகப்பெரிய கேடு ஆகும்.மொத்தத்தில் கவர்னர் உரை, திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட புளுகு மூட்டை பிரகடனம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications