தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமெடுத்துள்ளது... நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 33,075 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 2,31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முதியவர்களை மட்டுமே முதல் அலை தாக்கி வந்த நிலையில், இந்த 2-ம் அலை கர்ப்பிணிகள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது..
சாமானிய மக்களை கடந்து அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், உட்பட பலதுறை சேர்ந்த பிரமுகர்களையும் தாக்கி வருகிறது.. சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.. இந்த தகவலை எல்.முருகனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் "எனது இளைய மகன் இந்திரஜித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது... கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கும், எனது மூத்த மகன் மற்றும் மனைவிக்கும் பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications