எல்லாரும் நோன்பு திறக்க வந்துருங்க! தமிழக பாஜகவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அன்போடு அழைக்கும் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அரபு மாதமான ரமலானில் 29 அல்லது 30 நாட்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உண்ணாமல், பருகாமல் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் ரமலான் பிறை பார்க்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர்.

ரமலானும் மத நல்லிணக்கமும்
ரமலான் மாதம் வந்துவிட்டாலே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற மதம் கடந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் ராம நவமி கலவரம், வீடுகள் இடிப்பு, மசூதிகள் மீது தாக்குதல் போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் அரங்கேறினாலும், அதற்கு இணையாக மத நல்லிணக்க நிகழ்வுகள் நடந்து வருவதை காண முடிகிறது.

இஃப்தார் நிகழ்வுகள்
குறிப்பாக ஒவ்வொரு ரமலான் மாதமும், அரசியல் கட்சிகள் இஃப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து அனைத்து மதத்தினரையும் அழைத்து மத நல்லிணக்க கூட்டங்கள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தானும் நோன்பு நோற்று கட்சி சார்பிலும் இஃப்தார் விருந்தை நடத்தினார். நேற்று திமுக சார்பில் சென்னையில் இஃப்தார் விருந்து நடத்தப்பட்டது. அதிமுகவும் இஃப்தார் விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

பாஜகவின் இஃப்தார் நிகழ்வு
இந்த சூழலில் தமிழ்நாடு பாஜகவும் நாளை இஃப்தார் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி சென்னை தியாகராயர் நகர் ஹபீபுல்லா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை 4:30 மணியளவில் பாஜகவின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாஜக சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் ஆசீம்பாஷா, பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பாஜக மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
Recommended Video

ட்விட்டரில் அழைத்த அண்ணாமலை
இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய துணைத் தலைவர் பாத்திமால் அலி வரவேற்பு நிகழ்த்துகிறார். இந்த இஃப்தார் விழாவில் பாரதி ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், சிறுபான்மை அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அழைத்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications