நடிகை காயத்ரி ரகுராம்- இசையமைப்பாளர் தீனா தயாரிப்பில் தமிழக பாஜகவின் வெற்றிவேல் வீரவேல் பாடல் ரிலீஸ்
சென்னை: "வெற்றிவேல் வீரவேல்" என்ற பாடலை தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
கந்த சஷ்டி விவகாரத்தில் வீடுகள் தோறும் தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கைகளில் முருகன் படத்தை வைத்து பூஜை செய்து வெற்றிவேல்- வீரவேல் முழக்கங்களை எழுப்பினர்.

இதன் பின்னர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் போது வீரவேல், வெற்றிவேல் என முழக்கமிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஈரோட்டில் தந்தை பெரியார் சிலைக்கு காவி உடை அணிவிக்க முயன்ற நபரும் கூட வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டபடி போலீசில் பிடிபட்டார்.
இதனிடையே தமிழக பாஜக தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "வெற்றிவேல் வீரவேல்" என்ற பாடலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று கமலாலயத்தில் வெளியிட்டார் மாநிலத்தலைவர் டாக்டர் எல்.முருகன்.

இதை தயாரித்த கலை கலாச்சார பிரிவின் மாநிலத்தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோருக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ரிங்டோன் வைக்க லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் என லிங்க் ஒன்றையும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்துள்ளது தமிழக பாஜக.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!










Click it and Unblock the Notifications