சென்னை, கோவை, சேலம் உள்பட 5 மாநகராட்சிகளில் இலவச வைஃபை.. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு
சென்னை: சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாநகராட்சிகளிலும் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு சார் இணைய வழி சேவைகளை மேலும் துரிதமாக அளித்திடும் விதமாக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் எல்காட் மூலம் பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன் மாநில தரவு மையம் 5 ஆண்டுகளில் 200 கோடி மதிப்பீட்டில் மேலும் விரிவுபடுத்தப்படும். இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தை மேலும் பரவலாக்கும் வகையில் சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாநகராட்சிகளில் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications