கடலூர் உள்பட.. 10 மாவட்டங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்.. பட்ஜெட்டில் செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர், தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்‌ 111 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தொடங்கப்படும்‌. அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வி கற்றல்‌ தரத்தினை மேம்படுத்திட திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்க பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் உயர் கல்வி படிப்பதை ஊக்குவிக்க புதுமை பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 TN Budget 2024 Industrial training institutes in to be set up in 10 districts Says Minister Thangam Thennarasu

அதேபோல, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 10 மாவட்டங்களில் புதிய அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் இது தொடர்பாக பேசியதன் விவரம் வருமாறு:-

1. கடலூர்‌ மாவட்டம்‌ வேப்பூர்‌,
2. திண்டுக்கல்‌ மாவட்டம்‌ குஜிலியம்பாறை,
3. கிருஷ்ணகிரி மாவட்டம் ‌போச்சம்பள்ளி,
4. நாமக்கல்‌ மாவட்டம்‌, சேந்தமங்கலம்‌,
5. புதுக்கோட்டை மாவட்டம்,‌ கந்தர்வக்கோட்டை,

6. இராமநாதபுரம்‌ மாவட்டம்,‌ கமுதி,
7. திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, நாட்றாம்பள்ளி,
8. திருவாரூர்‌ மாவட்டம்,‌ கூத்தாநல்லூர்‌,
9. திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்,‌
10. தூத்துக்குடி மாவட்டம்,‌ ஏரல்‌

ஆகிய இடங்களில்‌ 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்‌ 111 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தொடங்கப்படும்‌. அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வி கற்றல்‌ தரத்தினை மேம்படுத்திட திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+