வருவாய் பற்றாக்குறை 1.17%ஆக குறையும்! தமிழக அரசின் கடனும் 26%ஆக குறையும்! தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். வருவாய் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், விரைவில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. மாநிலத்தின் வருவாயை அதிகரித்து, செலவினங்களைக் குறைக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்து கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

தங்கம் தென்னரசு
இது தொடர்பாகத் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், "2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.
மத்திய அரசு மானியங்கள்
அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்குத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்குத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள். திருத்த மதிப்பீடுகளில் 20.538 கோடி ரூபாயாகக் கணிசமான அளவிற்குக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் முழு பங்குத்தொகையை மத்திய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் என எதிர்பார்த்து. மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரவினங்கள்
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள். திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3.31569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் பற்றாக்குறை
தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் வருவாய் பற்றாக்குறை 3.2 சதவிகிதத்தில் இருந்து 1.17 சதவிகிதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் நமது வருவாய் பற்றாக்குறை நிலை மேம்பட்டு 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம்.
செலவினங்கள்
தமிழக அரசின் செலவினங்களைப் பொறுத்தவரை அது வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடியாக இருக்கும் மதிப்பீடு செய்யப்படும். இது கடந்த நிதியாண்டின் செலவின திருத்த மதிப்பீடுகளை விட 9.65% வளர்ச்சி ஆகும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 49.279 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, திறமையான நிதி மேலாண்மையின் பலனாக திருத்த மதிப்பீடுகளில் 46467 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் நடப்பு ஆண்டில் குறைந்த போதிலும் வருவாய்ப் பற்றாக்குறை குறைவாகவே அமைந்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்து 41635 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முதலாக 2015-16 ஆம் ஆண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் என்ற அளவினைக் கடந்த வருவாய்ப் பற்றாக்குறை மாநில நிதி நிலைமை தொடர்ந்து சரிவைச் சந்தித்ததால், 2020-21ஆம் ஆண்டில் 3.28 சதவீதமாக உயர்ந்தது. இந்த சரிவுப் போக்கினை நேர்மறையாக மாற்றிட வேண்டும் என இந்த அரசு மேற்கொண்ட அபார முயற்சிகளின் காரணமாக அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து வரும் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறையின் விகிதம் 1.17 சதவீதமாக 2015-16 ஆம் ஆண்டு நிலைக்கு அருகில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
நிதிப் பற்றாக்குறை
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 108,690 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை. திருத்த மதிப்பீடுகளில் 6.992 கோடி ரூபாய் குறைந்து 101698 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட போதிலும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 344 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 3.26 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 106.963 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிகாட்டுகிறது..
கடன்கள்
நிகரக் கடன்கள் குறைந்துள்ள போதிலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2641 சதவீதமாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்தக் கடன் விகிதமானது சற்றே அதிகரித்து 26.43 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இவ்விகிதம் 26.07 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15வது நிதிக்குழு 2025-26 ஆம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள 28.70 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது" என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications