தொகுதிகள் 18.. ஆளுக்கு ஒரு எண்ணம்.. இதில் தினகரன் கணக்கு தனி கணக்கு.. என்ன கிடைக்கும்
18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தினகரனுக்கு சாதகமாகுமா? என தெரியவில்லை
Recommended Video
சென்னை: தேர்தல் தேதியை ஆணையம் சொன்னதில் இருந்தே படு பிசியாகிவிட்டர் டிடிவி தினகரன்தான்! அதுகூட பொதுத்தேர்தலுக்காக இல்லை.. முழுக்க முழுக்க இடைத்தேர்தலை மனதில் வைத்தே!
16 பேர் தன் தாய்க்கழகமான அதிமுகவில் இருந்து விலகி தினகரன் கட்சியில் அன்று சேர்ந்தார்கள்.. அவருக்கு விசுவாசியாக மாறி போனார்கள்... இதனால் தகுதி நீக்கம் என்ற கட்டத்துக்குள் அடைபட்டு கொண்டார்கள்.
இவர்களை விடுவிக்க தினகரன் எவ்வளவு முயற்சி செய்தார். கோர்ட் வரை போய் தோற்றுதான் போனார். அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனாலும் எத்தனையோ குழப்பங்கள், சர்ச்சைகள், புரளிகள் வந்தாலும், தினகரனை விட்டு கடைசிவரை பிரியாமல் இருக்கின்றனர். இதில் செந்தில் பாலாஜி விதிவிலக்கு!

செல்வாக்கு
சிறையில் சென்று நேரில் சந்திக்கும்போதெல்லாம் சசிகலா சொன்னதெல்லாம், "நம்பி இருப்பவர்களை கை விட்டுவிடாதே.. சீட் வழங்குவதில் முன்னுரிமை" என்பதுதானாம்! அதனால்தான் தன்னையே நம்பி அரசியல், பதவி, செல்வாக்கை இழந்தவர்களுக்கு தினகரன் இடைத்தேர்தலில் வாய்ப்பு தந்தார்.

திருவாரூர்
"திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் நடத்தப் போறீங்களா இல்லையா? மழையை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதா? நான் கோர்ட்டுக்கு போக போறேன்" அன்று நெஞ்சை நிமிர்த்தி தினகரன் உரக்க பேச காரணம், இங்கும் தனக்கான செல்வாக்கினை அவர் பொதுக்கூட்டங்களை நடத்தி பதிய வைத்ததுதான்!

எம்பி தொகுதிகள்
கடைசியில் பாராளுமன்ற, இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தன. திமுக, அதிமுக எம்பி தேர்தலை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது தினகரன் மட்டும் இடைத்தேர்தல்களில்தான் கவனம் செலுத்தினார். அதிமுக, திமுகவும் எம்பி தொகுதியில் வாரி இறைக்கிறார்கள் ஆனால் அமமுக அந்த அளவுக்கு தாராளத்தை காட்டவில்லை என்று சொல்லப்பட்டது. இதற்கு காரணமும் இதே இடைத்தேர்தல் மீதான கவனம்தான்!

வாக்கு பதிவு
இல்லையென்றால், தினகரன் நினைத்திருந்தால் அதிமுகவை விட தொகுதிகளில் "எக்கசக்க"மான விஷயங்களை செய்திருக்கலாம். கடைசியில் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிமுகவுக்கு தோல்வியை தரும் தொகுதிகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாகக்கூடும் என்று திமுக ஒரு பக்கம் கணக்கு போட்டு வந்தாலும், தினகரனின் மாஸ்டர் பிளான் தனி ரகமாக உள்ளது.

சர்ச்சைகள்
மற்ற கட்சிகளை போல பிரச்சாரங்களிலும் பரபரப்பு, சர்ச்சைகள், காரசாரங்கள் என எதுவுமே தினகரன் கட்சியில் காணப்படவில்லை. எல்லா வேலைகளும் சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளன. சில தொகுதிகளில் அதிருப்தியில் உள்ள அதிமுகவினரே அமமுகவுக்கு உள்ளடி வேலைகளை பார்த்து தந்துள்ளனர்.

ஆளப்போவது?
9 தொகுதிகளில் வென்றாக வேண்டும் அதிமுகவும், 20 தொகுதிகளில் எப்படியும் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று திமுகவும் ஒரு கணக்கு போட்டு செயல்பட்டுள்ள நிலையில், தினகரன் கணக்கு எப்படி உள்ளது, அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தை யார் ஆளப்போவது என்பது மே மாத இறுதியில் தெரிந்துவிடும். ஒருவேளை இந்த 18-ல் கிட்டத்தட்ட 5 தொகுதிகளை பிடித்தாலும் அது தினகரனின் சக்சஸ்தான்! அப்படி ஒரு முடிவு வந்தால், நாளை எதிர்கால அரசியலில் தினகரன் தவிர்க்க முடியாத சக்தியாகவே வளர்ச்சி பெற்று நிற்பார்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications