லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? மே 2ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே 2ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின.

இதையடுத்து கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம்தேதி காலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
முன்னதாக ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் ஏப்ரல் 11ம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின்னர் அடுத்த சில நாளில் தமிழக அரசே ஊரடங்கை ஏப்ரல் 30 தேதி வரை நீட்டித்தது.அதன்பிறகு தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊரடங்கை மே 3ம்தேதி வரை நீட்டித்தது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே 2ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உள்ள அந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள பல மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் சில தளர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications