வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னையில் வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமானது.

இந்த நிலையில் அந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறுகையில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.91 கோடி ஆகும்.
அவர்களில் 2.92 கோடி ஆண் வாக்காளர்களும் 2.98 கோடி பெண் வாக்காளர்களும், 3-ஆம் பாலினத்தவர்கள் 5,472 பேரும் உள்ளனர். இதில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டம் சென்னை ஆகும். இங்கு 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த அளவில் வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் அறியப்படுகிறது. இங்கு 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். அது போல் துறைமுகம் தொகுதியில் 1,66,511 வாக்காளர்கள் உள்ளனர்.
இளைய வாக்காளர்கள் அதாவது 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களை கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு இளைய வாக்காளர்கள் 7696 பேர் உள்ளனர். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயரும் பட்டியலில் உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications