பொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. ரூ.50 கோடியை முதற்கட்டமாக செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 69 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா கேஸ்கள் 34 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை நினைத்த வேகத்தை விட அதிகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ரெமிடிஸ்வர் கொள்முதல், ஆக்சிஜன் சிலிண்டர் கொள்முதல், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பு, வேக்சின் டெண்டர் விடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேவை
இதற்காக தமிழக அரசுக்கு பல கோடி நிதி தேவைப்படுகிறது. தமிழக அரசு ஏற்கனவே கடனில் உள்ள நிலையில் தற்போது கூடுதல் நிதி தேவையை சமாளிக்க மக்களிடம் அரசு நேரடியாக உதவி கேட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை தொடர்ந்து பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், நடிகர்கள், பிரபலங்கள் பலர் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவி வருகிறார்கள். நேரடியாகவும், பணப்பரிவர்த்தனை மூலமாகவும் பலர் தமிழக அரசுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். அதன்படி இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 69 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொள்முதல்
இதில் இணையவழியில் ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ. 39.56 கோடி முதல்வரின் நிவார நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தமிழக அரசின் அதிகார பூர்வ http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

செலவு
ரெம்டெசிவிர் உட்பட பல்வேறு மருந்துகள் வாங்க - 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான கண்டெயினர் வாங்க - 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
69 கோடி ரூபாய் நிதியில் இதுவரை மொத்தம் 50 கோடி ரூபாய் மேற்கண்ட செலவிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications