ஆளுநர் மாளிகைக்கு விரையும் தலைமைச் செயலாளர், DGP? அமித் ஷா சந்திப்புக்கு பிறகு உச்சக்கட்ட பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு விவகாரம் மற்றும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் மீதான சர்ச்சைகள் தொடர்பாகப் புதிய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், தற்போது தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்து தன்னைச் சந்திக்குமாறு ஆளுநர் ஆர்லேக்கர் அழைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் டெல்லி பயணத்திற்குப் பிறகு நடைபெறும் இந்தச் சந்திப்பு, தலைமைச் செயலக வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

tvk

சந்திப்பின் பின்னணி என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) டெல்லி சென்ற ஆளுநர் ஆர்லேக்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர், மாநிலத்தின் நிர்வாக மற்றும் காவல்துறைத் தலைவர்களை நேரில் அழைத்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவிற்கு தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்தும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்தும் விளக்கம் கேட்கவே ஆளுநர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கும் நேரத்தில்தான் இந்த சந்திப்பு இங்கே நடக்க உள்ளது.

விவாதிக்கப்பட உள்ள முக்கிய விவகாரங்கள்

ஆளுநர் ஆர்லேக்கர் உடனான இந்தச் சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரிடம் கீழ்க்கண்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநர் விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது:

தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த தொடர் கொலைகள், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், மதுரையில் நகைக்கடை கொள்ளை ஆகியவற்றில் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் கைது விவரம்.

மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள்.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ அருளால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நெருக்கடி மற்றும் அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நிர்வாக ரீதியான நடவடிக்கைகள். னு கொடுக்க வந்த பொதுமக்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் தாக்கியதாக எழுந்துள்ள புகார் குறித்த நிலைப்பாடு.

அரசு தரப்பு விளக்கம் மற்றும் அடுத்தகட்ட நகர்வு

மறுபுறம், விஜய் ஏற்கனவே தொடர்ந்து மூன்று நாட்களாகத் தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோருடன் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, குற்றங்களைத் தடுக்கக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சர்ச்சைகளில் சிக்கிய மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்கள் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளதாகவும், சட்டம் - ஒழுங்கைக் காக்க அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகு ஆளுநர் நடத்துகின்ற இந்த உயர்நிலைச் சந்திப்பில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் வழங்கப்போகும் பதில்களும், ஆளுநர் வழங்கப்போகும் அறிவுறுத்தல்களும் தமிழக அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+