ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி நிம்மதி.. தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி.. பெருகும் நம்பிக்கை
சென்னை: ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. இதனால், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே, ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் அதிகமாகவே நடந்து வருகிறது.. அதனால்தான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கடத்தல்: மேலும், கடத்தல் அல்லது பதுக்கலில் ஈடுபடுவோர் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டுவருவதுடன், ரேஷன் பொருட்களை கடத்தும் நபர்களையும் உடனுக்குடன் கைது செய்தும் வருகிறார்கள்..
அத்தியாவசியம்: சமீபத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அந்த அறிக்கையில், "அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.05.2023 முதல் 31.05.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ18,41,994/- மதிப்புள்ள 2447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 269 எரிவாயு உருளைகள், 180 கிலோ கோதுமை, 1100 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 450 லிட்டர் ஆகியவையும், 150 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
பதுக்கல்: குற்றச்செயலில் ஈடுபட்ட 561 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 ன்கீழ் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சக்கரபாணி: இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. பொது வினியோக திட்டம் குறித்து, மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வாணிப கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு இணை பதிவாளர்களுடன் ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நடத்தினார்.. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு கூட்டத்தில், சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை, கார்டுதாரர்களுக்கு உடனுக்குடன் வினியோகம் செய்ய வேண்டும்.. ஒருவேளை, அதன் தரம் குறைவாக இருந்தால், உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும்.. எக்காரணம் கொண்டும் பொருட்கள் தேங்கியிருக்க கூடாது.. தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ரேஷன் கடையில் தேங்கியிருக்கும் பொருட்கள் குறித்து சில புகார்கள் எழுந்தன.. அதாவது, சிலர் தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லை என்றும், இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டன..
பெருத்த நம்பிக்கை: இத்தகைய புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், பொருட்களை வாங்காமல் தாமதித்தால், திருப்பி அனுப்பப்பட்டுவிடும் என்பதால், ரேஷன் அட்டைதாரர்களாலும், பொருட்களை விரைந்து சென்று வாங்கி பயன்பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications