Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்”.. உடனே பேசி நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சங்கராபுரம் அருகே பூட்டை என்கிற கிராமத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தார்கள். ஏழு வருடங்களுக்கு முன்பே தாயையும் பறிகொடுத்த குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்தனர். யாருமே இல்லாத நிலையில், தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு கூட காசில்லாமல் தவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்தனர்.

Kallakurichi mk stalin children

கமலக்கண்ணன், சிறுநீரக பாதிப்பு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.

பொறியியல் படித்து வந்த அவரது மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதேபோல் 8 ஆம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அபினேஷ் மட்டும் பூட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். கிராம மக்களே கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங்களாகவே முன்வந்தார்கள். இதையடுத்து கிராம மக்களே வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தாய் தந்தையை இழந்த 4 குழந்தைகளை போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். அனைவரையும் படிக்க வைத்துவிடுவோம் என உறுதி அளித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.

நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+